உங்களுக்குத் தெரியுமா? இந்த உணவுகள் எல்லாம் அதிக நாட்கள் வைத்து சாப்பிடவே கூடாது... 

First Published Apr 18, 2018, 1:38 PM IST
Highlights
Do you know These foods should not be eaten for a long time ...


அனைவருக்கும் உணவு என்பது இன்றியமையாத ஒன்று ஆகும். உணவுகள் மீதமாகி விட்டால் அதனை வீணடிக்கக் கூடாது என்பதற்காக குளிர்சாதன பெட்டியில் வைத்து மீண்டும் எடுத்து சுடவைத்து அதனை பல நாட்களுக்கு சாப்பிடுகிறோம். இவ்வாறு நாள்பட்ட உணவுகள் திரும்ப திரும்ப சுட வைத்து நாம் சாப்பிடும் உணவுகள் நஞ்சை வெளியிடுகின்றன.

அதிலும் இந்த உணவுகள் எல்லாம் அதிக நாட்கள் வைத்து சாப்பிடவே கூடாது. 

காய்கறிகள்

இன்றைய சூழலில் தினமும் காய்கறிகள் கூட வாங்க நேரம் இல்லாமல் மொத்தமாக வாங்கி ஃப்ரிட்ஜ் வைத்துவிடுவோம்.

இவ்வாறு வைப்பதால் நஞ்சினை உற்பத்தி செய்யும் பீட்ரூட், பசலைக்கீரை போன்ற காய்கறிகள் நைட்ரேட்டினை உற்பத்தி செய்யும்.

இந்த நஞ்சானது காய்கறிகளில் அப்படியே தங்கி சாப்பிடும் போது செல்களை சிதைக்கும். எனவே இந்த காய்கறிகளை அதிக நாட்கள் வைத்திருக்கக்கூடாது.

சிக்கன்

சிக்கனில் அதிகளவு புரதம் இருப்பதால் 2 நாட்களுக்கு மேலாக சுட வைத்து சாப்பிடக்கூடாது. அதிக நாட்கள் வைத்து சாப்பிடுவதால் இதயநோய், கல்லீரல் பாதிப்பு போன்றவை ஏற்படும்.

அரிசி

அரிசியை சமைத்தாலும் அதில் பாக்டீரியாக்கள் பெருக அதிகளவு வாய்ப்புள்ளது. இதனை நாம் சுட வைத்தாலும் அது உயிரோடு தான் இருக்கும்.

இவை இரட்டிபாகி ஜீரண தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் அரிசியை திரும்ப திரும்ப சுட வைக்கக்கூடாது. மீதமுள்ள அரிசியில் நீர் ஊற்றி சாப்பிடும் போது நன்மை தரும்.

வெஜிடேபிள் எண்ணெய்

சூரியகாந்தி, எள் எண்ணெய் போன்றவற்றை திரும்ப சுட வைத்து உபயோகிப்பதை போல தீயது ஏதும் இல்லை.இதனால் இதய தொடர்பான நோய்கள், புற்றுநோய் போன்றவை உருவாகிறது.

click me!