உங்களுக்குத் தெரியுமா? தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்தும் சக்தி அறுகம்புல்லுக்கு உண்டு…

First Published Aug 24, 2017, 1:44 PM IST
Highlights
Do you know The healing power of the skin on the skin has a healing effect ...


அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் கட்டைகள் (தண்டு), வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன.

தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்தும் சக்தி அறுகம்புல்லுக்கு உண்டு. மேலும் சிறுநீரகக் கோளாறுகள், ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டல், உடலில் ஏற்படும் துர்நாற்றம், நெஞ்சுச்சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்று நோய்கள், உடற்சோர்வு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களையும் போக்க வல்லது.

அருகம்புல்லின் மருத்துவப் பயன்கள்:

அருகம்புல்லின் தண்டுப் பகுதி மற்றும் வேர்ப்பகுதி ஆகியன பாரம்பரியம்மிக்க நாட்டு மருத்துவத்தில் இதயக் கோளாறுகளைப் போக்க உபயோகித்து வரப்படுகிறது. குறிப்பாக மாரடைப்பு, இதய காளங்களின் அழற்சியைத் தடுப்பதாகவும் உள்ளது.

சர்க்கரையை குறிப்பாக ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மையுடையது. அருகம்புல்லில் அடங்கியுள்ள மேனிட்டால் மற்றும் சேப்போனின்ஸ் சத்துக்கள் சிறுநீரைப் பெருக்க அல்லது வெளித்தள்ள உதவுகிறது. ஆயுர்வேத மருத்து நூல்கள் அருகம்புல் சற்று காரமுடையது, கசப்புடையது, உஷ்ணத் தன்மை உடையது.

பசியைத் தூண்டக் கூடியது, காயங்களை ஆற்றவல்லது. வயிற்றிலுள்ள பூச்சிகளை, புழுக்களை வெளியேற்ற வல்லது. காய்ச்சலைத் தணிக்க வல்லது, ஞாபக சக்தியைப் பெருக்க வல்லது. மேலும் அறுகம்புல் வாய் துர்நாற்றத்தையும் உடலில் ஏற்படும் கற்றாழை வாடை உட்பட ஏற்படும் வேண்டாத நாற்றத்தையும் போக்க வல்லது. வெண்குட்டம் என்னும் தோல் நோய்க்கு மருந்தாவது.

நெஞ்சகச் சளியைக் கரைக்கக் கூடியது. மூலத்தை குணப்படுத்த வல்லது. ஆஸ்த்துமாவை அகற்ற வல்லது. கட்டிகளை கரைக்க வல்லது. மண்ணீரால் வீக்கத்தைக் குறைக்க வல்லது என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது.

மேலும் ஆயுர்வேதப்படி அருகம்புல் பித்த மேலீட்டால் ஏற்படும் வாந்தியையும், தாகம் என்னும் நாவறட்சியையும், பாதங்கள், கைகள் மற்றும் உடலின் எந்தப் பகுதியில் எரிச்சல் கண்டாலும் அதைப் போக்குவதற்கும், வாயில் எப்பொருளைச் சுவைத்தாலும் சுவையை உணர இயலாத நிலையைப் போக்குவதற்கும், நம்மை அறியாமல் உணரும் ஏதோ ஓர் உருவம், ஸ்பரிசம், சப்தம், நாற்றம் சுவை ஆகிய நிலையில் அறுகம்புல் தெளிவைத் தரும்.

அடிக்கடி காக்காய் வலிப்பு வந்து உணர்விழந்து போகுதல் அல்லது உடல் உறுப்புகள் கோணித்து போதல் என்கிற நிலையில் அறுகம்புல் அருமருந்தாகிறது. ஒருவித இனம்புரியாத மயக்கநிலை மறைக்க உதவுகிறது. தொழுநோய்க்கு நல்ல மருந்தாகிறது. சொறி, சிரங்கு, படை போன்ற எவ்வித தோல் நோயானாலும் அருகம்புல் குணம் தரவல்லது.

உள்ளுக்கும் கொடுத்து மேலுக்கும் உபயோகிப்பதால் இப்பயன் நிச்சயமாக கிடைக்ககூடியது ஆகும். அறுகம்புல் உள்ளுக்கு உபயோகிப்பதால் சீதபேதி ரத்தம் கலந்து வருவதாயினும் சீதம் என்னும் சளி கலந்து வருவதாயினும் குணப்படும். மூக்கில் திடீரென ரத்தம் கொட்டுதல் இதை (சில்லி மூக்கு) நோய்க்கும் கைவந்த மருந்தாகவும் உடனடி நிவாரணியாகவும் அறுகம்புல் அமைகிறது.

அருகம்புல் யுனானி மருத்துவத்தில் எரிச்சல் எங்கிருப்பினும் அதைப் போக்கவும், நுகர்வு உணர்வை மேம்படுத்தவும், மலமிளக்கியாகவும் இதயம் மற்றும் மூளைக்கு உரம் ஊட்டவும் வியர்வை தூண்டவும் ஞாபக சக்தியை பெருக்கவும், வாந்தியை தடுக்கவும், தாய்ப்பாலை பெருக்கவும்,

கோழையை அதாவது அடர்ந்த கெட்டிப்பட்ட சளியை உடைத்து கரைத்து வெளியேற்றவும் வயிற்றில் சேர்ந்து வலியை தருகிற காற்றை வெளியேற்றவும், குழந்தைகளுக்கு வந்து அடிக்கடி துன்பம் தருகிற சளியோடு கூடிய காய்ச்சலை போக்குவதற்கும், உடலில் எங்கு வலிஏற்பட்டாலும் ஏற்பட்ட வலியை தணிப்பதற்கும், வீக்கத்தை கரைப்பதற்கும், பல்நோயை குணப்படுத்துவதற்கும், ஈரல் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

click me!