உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த பானங்களை காலையில் குடிக்காதீங்க ப்ளீஸ்…

First Published Aug 24, 2017, 1:40 PM IST
Highlights
Want to loss your body weight? Do not drink these drinks in the morning ...


உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள நினைத்தால், இந்த பானங்களை காலையில் பருகுவதைத் தவிர்த்திடுங்கள்.

* வட மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் லஸ்ஸி மிகவும் பிரபலமான ஓர் பானம். இந்த பானமானது தயிர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து செய்யப்படுவது. இந்த பானத்தில் கொழுப்புக்களும், சர்க்கரையும் உடல் எடையை மிகவும் வேகமாக அதிகரிக்கும் அளவில் நிறைந்துள்ளது. அதிலும் ஒரு டம்ளர் லஸ்ஸியில் 159 கலோரிகள் இருக்கும்.

* தற்போது பாதாம் பால் அல்லது சாக்லேட் பாலைப் பருகுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஆனால் கடைகளில் விற்கப்படும் பாதாம் பவுடர் மற்றும் சாக்லேட் பவுடரை பாலில் சேர்த்து கலந்து பருகினால், அதில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை சுவையூட்டிகளால் உடல் பருமனைத் தான் சந்திக்கக்கூடும். ஒரு டம்ளர் சாக்லேட் அல்லது பாதாம் பாலில் 158 கலோரிகள் இருக்கும்.

* பழங்களை எப்போதும் அப்படியே சாப்பிட்டால் தான் அதன் முழுமையான பலனைப் பெற முடியும். அதனை ஜூஸ் வடிவில் தயாரித்துப் பருகும் போது, அதில் சுவைக்காக சர்க்கரையை சேர்க்க நேரிடும். இதனால் அந்த பழச்சாறு உடலுக்கு நன்மையைக் கொடுப்பதற்கு பதிலாக, தீமையைத் தான் விளைவிக்கும். அதிலும் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் 220-க்கும் அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே எப்போது பழங்களை சாறு வடிவில் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

* ஒரு டம்ளர் எருமை மாட்டுப் பாலில் 280 கலோரிகளும், 16.81 கிராம் கொழுப்புக்களும் உள்ளது. இதற்கு மேல் ஏதாவது சொல்ல வேண்டுமா என்ன?

* நீங்கள் உடல் எடை அதிகரிக்க வேண்டாம் என நினைத்தால், வாழைப்பழத்தையும், பாலையும் ஒன்றாகப் பருகாதீர்கள். ஏனெனில் ஒரு வாழைப்பழத்தில் மட்டும் 108 கலோரிகள் உள்ளது. அப்படியெனில் ஒரு டம்ளர் வாழைப்பழ மில்க் ஷேக்கில் எவ்வளவு கலோரிகள் இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

* பலரும் ஸ்மூத்தி மிகவும் ஆரோக்கியமான பானமாக கருதுவார்கள். ஆனால் அதில் தான் கலோரிகளும், கொழுப்புக்களும் அதிகமான அளவில் இருக்கும். ஒரு டம்ளர் ஸ்மூத்தியில் 145 கலோரிகள் இருக்கும்.

click me!