Bitter Gourd: பாகற்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உண்டாகும் தீமைகள் என்னவென்று தெரியுமா?

Published : Nov 28, 2022, 04:09 PM IST
Bitter Gourd: பாகற்காயை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உண்டாகும் தீமைகள் என்னவென்று தெரியுமா?

சுருக்கம்

பாகற்காய் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்ன என்பதை நாம் இங்கு அறிந்து கொள்ளலாம்.

பாகற்காயின் சுவை கசப்பு என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இயற்கையில் கசக்கும் பல உணவுப் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு இனிக்கும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவ்வகையில், கசக்கும் பாகற்காயில் எண்ணற்ற மருத்துவப் பலன்கள் நிரம்பியுள்ளது. பாகற்காயில் நார்ச்சத்து, கலோரிகள், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளது. பாகற்காய் சாப்பிட்டால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்ன என்பதை நாம் இங்கு அறிந்து கொள்ளலாம்.

பாகற்காயின் நன்மைகள்

தினந்தோறும் காலையில் துளசி இலை மற்றும் பாகற்காய் இலை ஆகிய இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், இதனை தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, சளி மற்றும் இருமல் விரைவில் குணமாகும்.

பாகற்காய் அல்லது அதன் இலைகள் இரண்டில் ஏதேனும் ஒன்றை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீரை தினந்தோறும் குடித்து வந்தால் நோய்த் தொற்றுகள் நம்மை அண்டாது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இன்சுலின் அளவு மேம்படுவதற்கு பாகற்காய் உதவி செய்கிறது. பாகற்காயில் இருக்கும் ஒருவகையான வேதிப்பொருள், இன்சுலினைப் போன்று செயல்பட்டு, இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவி புரிகிறது.

அரைத்த மசாலாவின் சுவையில் சுவையான காராமணி கிரேவி செய்து பார்க்கலாமா!

ஆரோக்கியமான சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பையைப் பாதுகாப்பதற்கு பாகற்காய் பெரிதும் உதவுகிறது. சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை நீக்குவதற்கும் இது உதவி செய்கிறது. 

பாகற்காயின் தீமைகள்

பாகற்காயை தினந்தோறும் சரியான அளவில் சாப்பிட வேண்டும். இல்லையெனில், அடிவயிற்றுவலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

நீரிழிவு நோயாளிகள் தொடர்ந்து பாகற்காயை சாப்பிட்டால், இரத்த சர்க்கரை அளவானது குறையும். ஆனால், அவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகளில் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும். ஆகவே, மருத்துவரை கலந்தாலோசித்து மிகவும் அவசியம். 

PREV
click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
Skincare Routine : அழகின் உச்சத்தைத் தொட இந்த '6' பழக்கங்கள் போதும்; உங்களை பாக்குறவங்க அசந்துடுவாங்க!!