எலுமிச்சை பழ தோலிலும் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா? இதை வாசிங்க தெரியும்...

First Published Jun 23, 2018, 4:44 PM IST
Highlights
Do you know the benefits of lemon juice? Know this ...


** எலுமிச்சை பழத்தின் தோலில் விட்டமின் A, C, பீட்டா கரோட்டின், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், ஃபோலேட் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது.

** எலுமிச்சை தோலின் உட்புறத்தில் உள்ள வெள்ளை தோலை நீக்கி, அதில் தேவையான அளவு வெந்நீர் ஊற்றி 10 நிமிடங்களுக்கு பின் வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால், ஜீரண மண்டலம் வலிமையாகி, உடல் எடை குறையும்.

** எலுமிச்சை பழத்தின் தோலில் செய்டஹ் டீயை தினமும் குடித்து வந்தால், உடலில் உள்ள ph அளவு சீராகி, கல்லீரலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதுடன், எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

** நகங்களை 10 நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து, எலுமிச்சை தோலை நகங்களின் மேல் 30 வினாடிகள் தேய்த்து பின் கழுவினால், நகங்களில் உள்ள மஞ்சள் நிறம் மறையும்.

** எலுமிச்சை பழத்தின் தோலை பற்களில் தேய்த்து வாய் கொப்பளித்து வந்தால், பற்களில் உள்ள மஞ்சள் நிறமும் மறைந்து விடும்.

** எலுமிச்சை தோலை துருவி ஸ்பிரேயர் உள்ளே போட்டு அதனுடன் ஒயிட் வினிகரை சேர்த்து 2 வாரம் கழித்து, அதை அனைத்து இடத்திலும் சுத்தம் செய்யும் கலவையாக பயன்படுத்தலாம்.

** எறும்புகள், கரப்பான் தொல்லை போன்ற பிரச்சனைகள் இருந்தால், அந்த இடத்தில் எலுமிச்சை தோலை நறுக்கி வைத்தால் போதும்.

click me!