உங்களுக்குத் தெரியுமா? நெல்லிக்காய் பேஸ்ட் பொடுகு தொல்லையை அடியோடு பொக்கும்…

 
Published : Jun 15, 2017, 01:43 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
உங்களுக்குத் தெரியுமா? நெல்லிக்காய் பேஸ்ட் பொடுகு தொல்லையை அடியோடு பொக்கும்…

சுருக்கம்

do you know that amla cure dandruff

 

1.. பெரும்பாலானவர்களுக்கு முடி கொட்டுவது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. இது அவர்களுக்கு மன உலைச்சலையும் ஏற்படுத்துகிறது. முடி அதிகம் கொட்டுகிறதே என்று கவலைப்பட்டால் இன்னும் தான் முடி கொட்டும். கவலையை நிறுத்தி, இந்த நெல்லிக்காய் தைலத்தைத் தலையில் தேயுங்கள்.

தேவையானவை:

பச்சை நெல்லிக்காய், துளசி இலை, கொட்டை நீக்கிய முற்றின கடுக்காய், கறிவேப்பிலை - தலா 100 கிராம் எடுங்கள்.

செய்முறை;

நான்கையும் சேர்த்து கிரைண்டரில் நன்றாக அரையுங்கள். இந்த விழுதை மெல்லிய துணியில் மூட்டையாகக் கட்டித் தொங்கவிடுங்கள்.

அதிலிருந்து துளி துளியாக சாறு சொட்டும். இந்த சாற்றினை சேமித்து, இதன் அளவில் மூன்று மடங்கு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுங்கள். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வர முடி கொட்டுவது நின்று, அடர்த்தியாக வளரவும் தொடங்கும்.

2.. தலையில் பனித்துளிகளைப் போன்று பொடுகும், செதில்களும் வந்து இம்சிக்கும். இதைப் போக்கி நிம்மதி தருகிறது இந்த நெல்லிக்காய் பேஸ்ட்.

தேவையானவை:

வெந்தயப்பொடி - 1 டீஸ்பூன், கடுக்காய் பொடி- அரை டீஸ்பூன், கடலை மாவு -3 டீஸ்பூன்..

செய்முறை:

இந்த மூன்றையும் கலக்கும் அளவுக்கு எலுமிச்சைச்சாறு, பச்சை நெல்லிக்காய் சாறு (இரண்டும் சம அளவு) சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள்.

இந்த பேஸ்ட்டை தலைக்கு `பேக்' ஆகப் போட்டு 10 நிமிடம் கழித்து அப்படியே தண்ணீர் விட்டு அலசுங்கள்.

வெந்தயம், கடுக்காய், கடலை மாவு மூன்றும் தலையை சுத்தப்படுத்தி செதில்களை நீக்கும். எலுமிச்சைச்சாறு தலையில் உள்ள அரிப்பைப் போக்கும்.

நெல்லிக்காய் முடியின் நுனி பிளவை நீக்கி முடியை கருகருவென வளரச்செய்யும்.

PREV
click me!

Recommended Stories

Garlic with Jaggery : பூண்டு + வெல்லம்.. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் 'உடலில்' இந்த அதிசயங்கள் நடக்கும்!
Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க