உங்களுக்குத் தெரியுமா? மற்ற கெட்டப் பழக்கத்தை காட்டிலும் புகைப்பிடிப்பதால் இதயம் அதிகம் பாதிக்கும்…

 
Published : Apr 28, 2017, 01:29 PM ISTUpdated : Sep 19, 2018, 03:12 AM IST
உங்களுக்குத் தெரியுமா? மற்ற கெட்டப் பழக்கத்தை காட்டிலும் புகைப்பிடிப்பதால் இதயம் அதிகம் பாதிக்கும்…

சுருக்கம்

Do you know Smoking more than other bad habits affects the heart ...

உண்ணும் உணவு முறைப்பார்த்தால், நிச்சயம் இதய நோய் வரலாம். ஏனெனில் எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளான பீட்சா, பர்க்கர் போன்றவற்றை சாப்பிடுவது, மதுபானத்தை அளவுக்கு அதிகமாக அருந்துவது, புகைப்பிடிப்பது என்றெல்லாம் இருந்தால், இதயம் பாதிப்படையாமல் ஆரோக்கியமாக இருக்குமா என்ன?

அளவுக்கு அதிகமான வேலைப்பளு இருந்தாலும், இதயம் பெரிதும் பாதிக்கப்படும். ஏனெனில் இந்த நேரம், மனமானது பெரிதும் பாதிக்கப்பட்டு, இதயத்தில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது.

இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதோடு, உடலையே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

1.. புகைப்பிடிப்பது

இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் புகைப்பிடிப்பது முக்கியமான ஒன்று. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் புகையிலையானது, இதயத்தின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பொருட்களில் ஒன்று. எனவே புகைப்பிடிப்பதை தவிர்த்தால், இதய நோய் வராமல் தடுக்கலாம்.

2.. கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், அவை கரோனரி இதய நோயை உண்டாக்கும். எப்படி என்றால் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடும் போது, அதில் உள்ள கொலஸ்ட்ரால், தமனிகளின் சுவர்களில் அதிகமாக தங்கி, தமனிகளின் அளவை குறைந்து, ரத்த ஓட்டத்தை தடுக்கும். எனவே எப்போதும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிலும் கொலஸ்ட்ரால் அளவானது 200-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

3.. உடல் எடை

இதய ஆரோக்கியத்தை கெடுப்பதில் அதிக உடல் எடையும் முக்கிய பங்கு வகிக்கிறது. சொல்லப்போனால், தற்போது மாரடைப்பு வருபவர்களின் உடலைப் பார்த்தால், அவர்களது உடல் எடை யானது, அளவுக்கு அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும்.

4.. உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய் வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்று. தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி செய்தால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.

5.. நீரிழிவு

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தாலும், இதயம் பாதிக்கப்படும். ஏனென்றால் நீரிழிவும் ஒரு வகையில் இதய நோயை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக ஆண்களை விட பெண் களுக்கு பெரிய அளவில் ஆபத்தை விரைவில் ஏற்படுத்தும். எனவே நீரிழிவை தடுக்கும் உணவுகளை டயட்டில் மேற்கொள்வது அவசியம்.

6.. உணவுகள்

டயட்டில் இருக்கும் போது, குறைந்த கொழுப்புள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், இதயநோய் வருவதை தடுக்க முடியும். குறிப்பாக பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் “சி” நிறைந்தை பழங்கள் மற்றும் காய்கறிகள் இதயத்தை பாதுகாக்கும்.

7.. ஆல்கஹால்

ஆல்கஹாலை சரியான அளவு குடித்தால், இதய நோய் வருவதை தடுக்கலாம் என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். ஆனால் அதையே அதிகம் சாப்பிட்டால், ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு, மார்பக புற்றுநோயும் வரும். எனவே அளவாக, டானிக் போன்று சாப்பிடுவது நல்லது.

8.. மனஅழுத்தம்

அதிகமான வேலைப்பளுவின் காரணமாக நிறைய பேர் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மன அழுத்தம் ஏற்படும் போது இதயத்திற்கு அதிகமான அழுத்தம் ஏற்பட்டு, இதயத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

எனவே மனஅழுத்தம் ஏற்படும் போது, அப்போது அதனை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் பயிற்சிகளை செய்து வந்தால், இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.

இவ்வாறு செய்யும் போது உடலில் ரத்த ஓட்டமானது சீராக அனைத்து உறுப்புகளுக்கும் பாயும்.

 

PREV
click me!

Recommended Stories

Papaya Face Pack : பனியால் முகம் வறட்சி ஆகுதா? நீரேற்றமாக வைக்கும் 'பப்பாளி' ஃபேஸ் பேக்!
Aloe Vera For Dandruff : பொடுகை நிரந்தரமாக நீக்க 'கற்றாழை' ஜெல்லை இந்த 1 பொருளுடன் கலந்து யூஸ் பண்ணுங்க