உங்களுக்கு தெரியுமா? ஓமம் – கற்பூரவல்லி இலை சூப் குடித்தால் சளி, இருமல் நீங்கும்...

 
Published : Feb 10, 2018, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
உங்களுக்கு தெரியுமா? ஓமம் – கற்பூரவல்லி இலை சூப் குடித்தால் சளி, இருமல் நீங்கும்...

சுருக்கம்

Do you know omam - karpooravalli leaf soup cure cold and cough ...

சளி, இருமல் போக்கும் ஓமம் – கற்பூரவல்லி இலை சூப்

இருமல், சளி, வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள் ஓமம் – கற்பூரவல்லி இலை சூப் செய்து பருகலாம். இன்று இந்த சூப்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஓமம் – கற்பூரவல்லி இலை சூப்

தேவையான பொருட்கள் :

கற்பூரவல்லி இலை – 10,

ஓமம் – 2 டீஸ்பூன்,

சீரகம் – 2 டீஸ்பூன்,

தனியா – 2 டீஸ்பூன்,

மிளகு – 4 எண்ணிக்கை,

சுக்குத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),

இஞ்சி – 1 துண்டு,

பூண்டு – 4 பல்,

சோம்பு – சிறிது (தேவைப்பட்டால்),

உப்பு – தேவைக்கு,

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை (தேவைப்பட்டால்),

வெற்றிலை – 4,

நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை :

** கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு கற்பூரவல்லி இலை, வெற்றிலை வதக்கி தனியே வைத்து கொள்ளவும்.

** மற்றொரு கடாயில் சிறிது நெய் விட்டு சூடானதும் ஓமம், சீரகம், தனியா, சோம்பு, மிளகு, பூண்டு, பெருங்காயத்தூள் வதக்கிய பின்னர் அதில் வதக்கிய கற்பூரவல்லி இலை, வெற்றிலையுடன் சேர்த்து 2 கப் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

** நன்கு கொதித்து 1 கப்பாக சுண்டியதும் வடிகட்டி பருகவும்.

** ஓமம் – கற்பூரவல்லி இலை சூப் ரெடி.

PREV
click me!

Recommended Stories

Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்
Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி