நாம் மறந்துபோன மருதாணியில் இவ்வளவு மருத்துவம் இருக்கா?

Asianet News Tamil  
Published : Feb 10, 2018, 01:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
நாம் மறந்துபோன மருதாணியில் இவ்வளவு மருத்துவம் இருக்கா?

சுருக்கம்

Do we have so much medicine in forgotten henna?...

மருதாணி

** கையில் மருதாணி இட்டுக்கொள்வது தமிழகப் பெண்கள் இடையே காலம் காலமாகவே இருந்து வருகிறது.

** இப்போது பலர் மருதாணிக்குப் பதிலாக நெயில் பாலீஷுக்கு மாறிவிட்டார்கள். அந்த நெயில் பாலீஷ் அவ்வப்போது நகத்தில் இருந்து உரிந்து விழ, சாப்பிடும்போது அப்படியே வயிற்றுக்குள் போய் ஒரு வழி பண்ணிவிடுகிறது. ஆனால், மருதாணி வைத்துக்கொள்வதால் இதுபோன்ற பிரச்சினைகளே கிடையாது.

** நகங்களின் இடுக்கில் அழுக்கு சேர்வது தவிர்க்க முடியாத ஒன்று. நகத்தை வளர விடாமல் ஒட்ட நறுக்கி வந்தால்தான் அதைத் தவிர்க்க முடியும். இன்றைய ‘பரபர’ வாழ்க்கை முறையில் பலர் நகம் வெட்டுவதற்குக்கூட நேரம் இல்லாமல் தவிக்கிறார்கள்.

** மருதாணி வைத்துக்கொண்டால் நகங்களின் இடுக்கில் சேர்ந்திருக்கும் அழுக்கில் உள்ள விஷக்கிருமிகளை அது அழித்துவிடும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் சக்தியும் இந்த மருதாணிக்கு உண்டு.

** இதுதவிர, தொற்றுநோயை ஏற்படுத்தும் கிருமிகள் அடிக்கடி மருதாணி இட்டுக்கொள்பவர்களை நெருங்குவது கடினம். சொறி-சிரங்கு போன்ற பிரச்சினைகளும் வராது.

** கால் பித்த வெடிப்புக்கு ஏதேதோ மருந்தை பூசுவதற்கு பதில் வாரம் இருமுறை மருதாணி பூசினால் பித்த வெடிப்பு, உடலின் பித்த சூடு அனைத்தும் போய்விடும்.

** மருதாணியில் ஹென்னா டோனிக் அமிலமும், நிறமூட்டக்கூடிய காரணிகளும் அடங்கியிருக்கின்றன. மருதாணியை ஆயுர்வேத மருத்துவத்தில் காயங்களை, கொப்புளங்களை சரியாக்கவும், ரத்தத்தைச் சுத்திகரிக்கவும், கூந்தல் வளரவும் பயன்படுத்துகிறோம்.

** மருதாணி உடல் சூட்டை தணித்து குளிர்ச்சி தரும். சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு மருதாணி அருமருந்தாகும்.

** நகங்களில் வரும் பூஞ்சைக் கிருமி தாக்குதல், நகச்சுற்று போன்ற பிரச்னைகளுக்கும் மருதாணியை அரைத்துப் பூசி வந்தால் சரியாகும். நகங்களின் இடுக்கில் சீழ்கட்டி இருந்தால் மருதாணியுடன், மஞ்சள் அரைத்துப் பூசலாம்.

 

PREV
click me!

Recommended Stories

இனி கருவில் இருக்கும் குழந்தைக்கும் இன்சூரன்ஸ்... வெறும் 1025 ரூபாய்தான்!
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!