தேங்காய் எண்ணெயை முகத்திற்கு பயன்படுத்துவது நல்லதா? பதில் தெரிஞ்சுக்க வாசிங்க...

First Published Feb 10, 2018, 1:10 PM IST
Highlights
Is it good to use coconut oil in the face? Read on to know the answer ...


தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்துவது நல்லதா? என்ற கேள்வி பலரது மனதில் இருக்கும். உண்மையிலேயே தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு மிகவும் ஏற்றது. மேலும் சரும அழகுப் பராமரிப்பதில் சிறப்பு வாய்ந்தது. இதற்கு காரணம் அதில் உள்ள சத்துக்கள் தான்.

** தேங்காய் எண்ணெயில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சருமத்திற்கு அடியில் தங்கி, சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ள உதவும்.

** மேலும் இதில் காப்ரிக், காப்ரிலிக் மற்றும் லாரிக் ஆசிட் உள்ளது. இவை சருமத்தில் எந்த ஒரு கிருமிகளும் தாக்காமல் தடுக்கும். அதுமட்டுமின்றி, தேங்காய் எண்ணெயில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் புரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது.

தேங்காய் எண்ணெய்யை சருமத்திற்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

** இரவில் தூங்கும் முன் முகத்தில் உள்ள மேக்கப்பை நீக்க தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதனால் மேக்கப் முழுவதும் நீங்குவதோடு, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

** உங்களுக்கு சருமத்தில் வறட்சி அதிகம் ஏற்படுமாயின், தேங்காய் எண்ணெயை கைகளுக்கு தடவலாம். மேலும் தேங்காய் எண்ணெயை கைகளுக்குத் தடவினால், நீண்ட நேரம் சருமத்தில் ஈரப்பசை தங்கியிருக்கும்.

** தேங்காய் எண்ணெயில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சையெதிர்ப்பு பொருள் உள்ளது. எனவே தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு தடவி வந்தால், சருமத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

** கால்களில் உள்ள முடியை நீக்கும் முன், தேங்காய் எண்ணெய் சருமத்தில் தடவிக் கொண்டு ஷேவிங் செய்தால், ஷேவிங் செய்த இடம் மென்மையாக இருப்பதோடு, முடியும் எளிதில் வெளிவரும்.

** தினமும் தேங்காய் எண்ணெயைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படும்.

click me!