உங்களுக்குத் தெரியுமா? ஒற்றை தலைவலியின் போது இதை குடித்தால் சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கும்...

Asianet News Tamil  
Published : Apr 24, 2018, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
உங்களுக்குத் தெரியுமா? ஒற்றை தலைவலியின் போது இதை குடித்தால் சில நிமிடங்களில் நிவாரணம் கிடைக்கும்...

சுருக்கம்

Do you know If you drink it during a single headache you will get relief in a few minutes ...

 

ஒற்றைத் தலைவலிக்கு உடனடி தீர்வு

சாதாரணமாக தலைவலி வந்தாலே, நாம் படாத பாடுபடுகிறோம். அதிலும் ஒற்றைத் தலைவலி பிரச்சனை ஒருவருக்கு வந்தால் அவ்வளவுதான். அவ்வளவு கொடுமையாக இருக்கும்.

ஒற்றை தலைவலி எப்போது வேண்டுமானாலும் வரும். அதிலும் வலி இருக்கும் போது சூரியக்கதிர்கள் பட்டால், அப்போது தாங்கவே முடியாது. 

இந்த ஒற்றை தலைவலி தீவிரமாக இருக்கும் போது, குமட்டல், வாந்தி, கால்கள் மற்றும் கைகளில் கூச்ச உணர்வு அதிகரிக்கும், பார்வை மங்கலாகும். 

ஒற்றைத் தலைவலியில் இருந்து உடனடியாக விடுபட உதவும் ஓர் எளிய வழி 

1.. கல் உப்பு 

கல் உப்பு பல்வேறு உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிப்பதில் மிகவும் சிறந்தது. எனவே நல்ல தரமான உப்பை எப்போதும் வாங்குங்கள். அதிலும் இமாலய உப்பு மிகவும் நல்லது. 

இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவதோடு, தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சை அளிக்கவும், உடலில் அல்கலைனைத் தக்கவைக்கவும், எலக்ட்ரோலைட்டுக்களை நிலையாக வைத்திருக்கவும் உதவும்.

2.. எலுமிச்சை 

ஒற்றைத் தலைவலியில் இருந்து விடுபட உதவும் மற்றொரு பொருள் எலுமிச்சை. இது உடலை சுத்தம் செய்வதோடு, ஒற்றைத் தலைவலியில் இருந்தும் நிவாரணம் அளிக்கும்.

தேவையான பொருட்கள்:

கல் உப்பு – 1/2 டீஸ்பூன்

எலுமிச்சை – பாதி

செய்முறை:

முதலில் ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து, அத்துடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து குடிக்க வேண்டும். 

இப்படி ஒற்றை தலைவலியின் போது குடித்தால், சில நிமிடங்களில் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake