தினமும் முருங்கைக்கீரை சூப் குடித்தால் தலை முடி எப்படி வளரும் தெரியுமா? 

First Published Jun 27, 2018, 2:48 PM IST
Highlights
Do you know how to grow hair every day if you drink siphonet soup?


தொடர்ந்து 3 மாதங்கள் தினமும் முருங்கைக்கீரை சூப் குடித்தால் தலை முடி நன்கு செழித்து வளரும். 

முருங்கையில் இருக்கும் வைட்டமின்கள் : 

100 கிராம் முருங்கை இலையில் 92 கலோரி உள்ளது.

ஈரபதம்-75.9%

புரதம்-6.7%

கொழுப்பு-1.7%

தாதுக்கள்-2.3%

இழைப்பண்டம்-0.9%

கார்போஹைட்ரேட்கள்-12.5%

தாதுக்கள்,வைட்டமின்கள்,

கால்சியம்-440 மி,கி

பாஸ்பரஸ்- 70மி.கி

அயன்- 7 மி.கி

வைட்டமின் சி 220 மி.கி

முருங்கைகீரை சூப் செய்யும் முறை:

முருங்கைகீரை – 2 கப்

வெண்ணெய் 1 – டீ ஸ்பூன்

கார்ன் ஃப்ளோர் – 1 டீ ஸ்பூன்

உப்புத்தூள், மிளகுத்தூள் – சிறிதளவு

செய்முறை:

முதலில் 2 டம்ளர் தண்­ணீர் சேர்த்து சுத்தம் செய்து வைத்த கீரையை போட்டு 7 நிமிடங்கள் வேகவைத்துகொள்ள வேண்டும். கீரையில் உள்ள சத்து தண்­ணீரில் இறங்கி விட்டிருக்கும்.

அதை உடனே எடுத்து வடிகட்டி (இல்லையெனில் சத்துக்கள் திரும்பவும் கீரைக்கே சென்றுவிடும்), தேவைப்பட்டால் வெண்ணை சேர்க்கலாம் சூட்டிலேயே உருகிவிடும். 

அடர்த்தியாக வேண்டும் என்று நினைப்பவர்கள் கார்ன் ஃப்ளோரை சிறிது தண்ணீரில் கரைத்து சேர்த்துக்கொள்ளலாம்.

வடிகட்டியபின் இதை சேர்த்து இரண்டு கொதி விட்டு இறக்கவும்) பின்பு மிளகுத்தூள், உப்புத்தூள் சேர்த்து பருக வேண்டும்.
 

click me!