இயற்கை உணவை உண்பதால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Asianet News Tamil  
Published : Sep 14, 2017, 01:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
இயற்கை உணவை உண்பதால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

சுருக்கம்

Do you know how much benefits can we get from eating natural food?

** சமைக்காமல் உண்பதால், உணவுப் பொருள்களின் உயிர்ச்சத்துகள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு மருந்தாக மாறுகிறது.

** கழிவுகளின் தேக்கமே நோய். இயற்கை உணவு உண்பதால், உடலில் உள்ள கழிவுகள் தேங்காமல் முற்றிலும் நீக்கப்படும். இதனால் நோய் வராமல் காத்துக்கொள்ளலாம்.

** உமிழ்நீரை, `உயிர் நீர்’ என்பர். இயற்கை உணவை நன்கு மென்று உமிழ்நீரோடு சேர்த்துச் சாப்பிடுவதால் எளிதில் செரிமானமாகும்.

** உணவுக்கும் குணத்துக்கும் நெருங்கிய நேரடித் தொடர்பு உண்டு. இயற்கை உணவு நாளடைவில் நம்முள் சாத்வீக குணத்தை மேலோங்கச் செய்யும். மனம் அமைதி பெறும். செயல்களில் நிதானம் கைகூடும். நிதானம், பலவிதங்களில் நம்மைப் பண்படுத்தும்.

** எண்ணெயில்லாமல் சமைக்கப்படுவதால், இதயம் தொடர்பான நோய்கள் வரும் வாய்ப்புக் குறையும். இதய நோய் இருந்தால், இந்த இயற்கை உணவே மருந்தாகிக் காக்கும்.

** சமைத்து உண்ணும் உணவின் அளவைவிட, சமைக்காமல் உண்ணும் உணவின் அளவு மிகக் குறைவாக இருக்கும். இது உடல் எடை அதிகரிக்காமல், சீராகப் பராமரிக்க உதவும்.

** நாள்பட்ட நோய்களான நீரிழிவு, ஆஸ்துமா போன்ற நோய்களும் உயிர்கொல்லி நோய்களான புற்றுநோய் போன்ற நோய்களும் குணமாக இயற்கை உணவு துணைநிற்கும்.

** உடல் பருமன், மாதவிடாய்ப் பிரச்னைகள், சிறுநீரகக் கோளாறு, செரிமானமின்மை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு இயற்கை உணவின் மூலம் நிரந்தரத் தீர்வு காணலாம்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake