இந்த மூலிகை டீ-யை இரவு தூங்குமுன் குடித்தால் எவ்வளவு நல்லது தெரியுமா? செய்முறை உள்ளே...

First Published Feb 27, 2018, 2:10 PM IST
Highlights
Do you know how good this tea tea is to sleep before dinner? The recipe inside ...


தினசரி நமது ஆரோக்கியத்தை பேணவும், உடல்நலம் சீர் குலையாமல் பார்த்து கொள்ளவும் உதவும் சிறந்த பானம் டீ. பால் சேர்த்து டீ குடிப்பதை விடவும், மூலிகை டீ குடிப்பதால் நிரம்ப நன்மைகள் கிடைக்கின்றன.

இந்த வகையில், இஞ்சி, இலவங்க பட்டை, கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் டீ குடிப்பதால், உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.

தேவையான பொருட்கள்:

இஞ்சி – சிறிதளவு

இலவங்கப் பட்டை – சிறிதளவு

கிராம்பு – கால் டீஸ்பூன் அளவு

தண்ணீர் – இரண்டு கப்

தேன் – கால் டீஸ்பூன்

செய்முறை:

தண்ணீரை கொதிக்க வைக்கவும். நசுக்கிய இஞ்சி, இலவங்கப் பட்டை பொடி, கிராம்பு மூன்றையும், கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.

ஐந்து நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். சூடு இதமான அளவிற்கு வந்த பிறகு, வடிக்கட்டி அதில் தேன் சேர்த்து பருகவும்.

அடங்கியுள்ள வைட்டமின் சத்துக்கள்:

இஞ்சி, இலவங்க பட்டை, கிராம்பு சேர்த்து தயாரிக்கப்படும் இந்த டீ குடிப்பதால் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்…, வைட்டமின் B,C,E,J மற்றும் K.

நன்மைகள்:

** கொலஸ்ட்ரால் குறைக்க உதவுகிறது.

** சளி தொல்லை நீங்க பயனளிக்கிறது.

** உடலில் உள்ள நச்சுக்களை அளிக்க செய்கிறது.

** செரிமானம் சீரடைய பயனளிக்கிறது.

** இரத்த ஓட்டம் சீராக்க உதவுகிறது.

** இதயம், கல்லீரல், கணையம் போன்ற பாகங்களுக்கு ஆரோக்கியம் அளிக்கிறது.

** உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

click me!