உடலில் இருக்கும் கொழுப்புகளை மிக விரைவில் கரைக்க இந்த பானத்தை அருந்துங்கள்...

 
Published : Feb 27, 2018, 02:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
உடலில் இருக்கும் கொழுப்புகளை மிக விரைவில் கரைக்க இந்த பானத்தை அருந்துங்கள்...

சுருக்கம்

Drink this fat to break the fat in the body very quickly ...

சிறிய வியாதிகளுக்கு கூட இரசாயன மருந்துகளை உட்கொள்வதை நிறுத்த வேண்டும். ஏனெனில் இந்த ரசாயன மருந்துகள் நீண்ட காலத்தில் உங்கள் சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கலாம் மேலும் இதில் பக்க விளைவுகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.

இன்று உடல் பருமன் மற்றும் கொழுப்பு அதிகம் இருப்பவர்களின் விகிதம் இந்தியாவில் மிக அதிகம். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டு அந்த நபரின் சுகாதாரம் மற்றும் வாழ்க்கை தரத்தை பாதிக்கிறது. 

அதிக கொழுப்பு குறைத்து மன அழுத்தத்தை போக்கும் பானம் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

எள் விதைகள் – 1 தேக்கரண்டி

தேன் – 1 தேக்கரண்டி

செய்முறை

ஒரு கிண்ணத்தில் எள் விதைகள் மற்றும் தேனை பரிந்துரைக்கப்பட்ட அளவு சேர்க்கவும். இந்த இரு பொருட்களையும் நன்கு கலக்கி ஒரு பசை போன்று மாற்றவும்.

இந்த ஆரோக்கியமான உணவை, ஒவ்வொரு நாள் காலை மற்றும் படுக்கைக்கு முன் உங்களின் வழக்கமான உணவை உட்கொண்ட பின், எடுத்துக் கொள்ளவும். .

வீட்டில் இந்த சிகிச்சை முறையை முயற்சி செய்து பார்க்கவும். அது உங்களுக்கு பலனளிக்கும் விதத்தை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

பயன்கள்

எள் விதைகள் மற்றும் தேன் கலவை உங்களின் இரத்த குழாய்கள் உள் சென்று அங்கு சேமித்து வைக்கப்பட்டுள்ள அதிக கொழுப்புகளை கரைக்கும் திறன் பெற்றுள்ளது. இதனால் உங்களின் நீண்ட நாள் கொழுப்பு பிரச்சனை கண்டிப்பாக தீர்ந்து விடும்.

கூடுதலாக, இந்த இயற்கை கலவையில் உள்ள அதிகமான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உங்களின் மூளையில் உள்ள செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது.

அதன் மூலம் மூளையில் செரோடோனின் உற்பத்தி அதிகரித்து மன அழுத்தத்ம் கட்டுப்படுத்தப்படுகின்றது.

PREV
click me!

Recommended Stories

Belly Fat Burning Exercises : வீட்டில் செய்யும் இந்த '4' எளிய பயிற்சிகள் போதும்! கொழு கொழுனு தொங்கும் தொப்பையை அப்படியே குறைக்கும்
Healthy Lifestyle : 30 வயசான பிறகு இந்த '5' விஷயங்களை தெரியாம கூட பண்ணாதீங்க.. ஆரோக்கியத்திற்கு எதிரி