
மாதுளை
இது மாதுளங்கம், பீசபுரம், தாடிமக்கனி என வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. பூ, பிஞ்சு, பழம், விதை, பட்டை, வேர் என மாதுளம் மரத்தின் அனைத்துப் பாகங்களுமே மருத்துவக் குணமுடையவை.
** மாதுளம்பூ மொக்கை காயவைத்துப் பொடியாக்கி சாப்பிட்டுவந்தால் இருமல் நிற்கும்.
** மாதுளம்பூவின் சாற்றுடன் அறுகம்புல்லின் சாற்றையும் சேர்த்துக் குடித்துவந்தால் மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் நிற்கும்.
** மாதுளம் பிஞ்சை நறுக்கி, நீர்விட்டுக் கொதிக்கவைத்து குடித்துவந்தால் சீதபேதி நிற்கும்.
** பிஞ்சுக்காய்களை மையாக அரைத்து பாலில் கலந்து, காலை – மாலை என குடித்துவந்தால் மாதவிடாயின்போது வரக்கூடிய அதிக ரத்தப்போக்கு சரியாகும்.
** மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து மணப்பாகு செய்து குடித்துவந்தால் காய்ச்சல், தாகம், அழலை போன்றவை குணமாகும்.
** பழத்தோலை உலர்த்திப் பொடி செய்து சாப்பிட்டுவந்தால் இளைப்பு நோய் குணமாகும்.
** வேர்ப்பட்டையுடன் லவங்கம் சேர்த்து நீர்விட்டுக் காய்ச்சிக் குடித்து வந்தால் தட்டைப்புழு மலத்துடன் வெளியேறும்.
** மாதுளம்பழத்தை ஆண்கள் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக்கோளாறுகள் நீங்கும்.
** பெண்கள் சாப்பிடுவதனால் கருப்பையில் வரக்கூடிய நோய்கள் விலகும்.
** மேலும், மாதுளம் பழத்தை சாப்பிடுவதன்மூலம் இருபாலருக்கும் வெப்பத்தால் வரக்கூடிய காய்ச்சல், நெஞ்செரிச்சல், காதடைப்பு, மயக்கம் போன்றவை சரியாவதோடு உடல் குளிர்ச்சியடையும்.