உங்களுக்குத் தெரியுமா? ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையைப் போக்க வெல்லப்பாகு சாப்பிடுங்கள்...

Asianet News Tamil  
Published : Jun 05, 2018, 01:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
உங்களுக்குத் தெரியுமா? ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மையைப் போக்க வெல்லப்பாகு சாப்பிடுங்கள்...

சுருக்கம்

Do you know Eat molasses to get rid of infertility in men ...

வெல்லப்பாகு

“வெல்லத்தின் முழுமையான பலன்கள் கிடைக்க வேண்டும் என்றால், வெல்லப்பாகு நிலைதான் மிகச் சிறந்தது. செயற்கையான வேதிப்பொருள்கள் சேர்க்கப்படாத நிலையில் இருக்கும் வெல்லப்பாகில் கூடுதல் மருத்துவப் பயன்கள் கிடைக்கும்” 

வெல்லப்பாகுவில் இருக்கும் சத்துகள்

கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இருப்புச்சத்து, பாஸ்பரஸ், குரோமியம், கோபால்ட் மற்றும் சோடியம் போன்ற உடலுக்குத் தேவையான அத்தியாவசிய தாதுச் சத்துக்கள் உள்ளன. 

மேலும், வைட்டமின் பி 3, நியாசின் (Niacin), வைட்டமின் பி 6, தயாமின், ரிபோஃப்ளேவின் ஆகியவையும் உள்ளன. இதில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்டும், குறைந்தளவு கொழுப்புச்சத்து மற்றும் நார்ச்சத்தும் உள்ளன.

இரத்தச்சோகை நீங்கும்

கரும்பில் உள்ள தாமிரம், இரும்புச்சத்து ஆகியவை உடலில் ரத்த விருத்தியை அதிகரிக்கும். இதனால் ரத்த ஓட்டம் சீராகும். ரத்தச்சோகை நீங்கும். இது, ரத்தத்தையும் சுத்தம் செய்யக்கூடியது.

வளர்சிதை மாற்றம் சீராகும்!

இதில் உள்ள தாமிரம் நம் உடலில் அதிக அளவில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்வதால், உடல் உறுப்புகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சீராக கிடைக்கும். இது, வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்.

செரிமானம் சீராகும்

உமிழ்நீரைப் பெருக்கி, சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாக உதவும். இது, உணவுக்குழாய், வயிறு என உடல் உறுப்புகளையும் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது.

மலச்சிக்கல் போக்கும்

இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயிற்றுப் புண்களை ஆற்றக்கூடியவை. இதிலுள்ள சோடியம், பாஸ்பேட் போன்றவை மலச்சிக்கல் நீங்க உதவும்.

புற்றுநோய் தடுக்கும்

இதில் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைச்சர்க்கரையில் உள்ளதைவிட அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை புற்றுநோய்ச் செல்களை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டவை. மேலும், இதயம் தொடர்பான நோய்கள் வருவதையும் தடுக்கும்.

எலும்பை வலுவாக்கும்!

இதில் உள்ள கால்சியம் மற்றும் இரும்புச்சத்துகள் எலும்புகளை வலுவாக்கும். ஆஸ்டியோபொரோசிஸ் (Osteoporosis) போன்ற எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்.

உடல் சோர்வு நீக்கும்

உடலில் மெக்னீசியத்தின் குறைபாட்டால் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், தலைவலி, தசைப்பிடிப்பு ஆகியவற்றைச் சரியாக்கும். உடல் சோர்வை நீக்கும்.

விந்தணுக்களை அதிகரிக்கும்!

இதில் உள்ள மாங்கனீஸ் ஆண்களின் பாலியல் ஹார்மோன்களின் சுரப்பை அதிகரிக்கும். நரம்பு மண்டலங்கள் சீராகச் செயல்பட உதவும். விந்தணுக்களின் எண்ணிக்கைய அதிகரித்து, ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையைப் போக்கும்.

பெண்களின் நலன் காக்கும்
 

இதில் கால்சியம், மக்னீசியம் போன்ற சத்துகள் நிறைவாக உள்ளன. 

இது, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ரத்த இழப்பால் ஏற்படும் ரத்தசோகை, கால்சியம் பற்றாக்குறையால் ஏற்படும் எலும்புத் தேய்மானம், மூட்டுவலி போன்றவற்றுக்குச் சிறந்த தீர்வு தரும். 

கர்ப்பிணிகளின் உடல் எடையை அதிகரிக்காமல், அதேநேரத்தில் உடலுக்கு வலு சேர்க்க உதவும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake