இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சீரகத் தண்ணீரை ஒரு மாதம் குடித்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்...

First Published Jun 5, 2018, 1:33 PM IST
Highlights
People with blood pressure drink a cup of cumin water once a month


சீரகத் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

சீரகம் நோய் எதிர்ப்பு சக்தியாகவும், பாக்டீரிய - பூஞ்சை எதிர்ப்பு பொருளாகவும் விளங்குகிறது.

ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் மிக முக்கியப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. 

கார்ப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டது. மேலும் குளிர்ச்சி தன்மை கொண்டது.

அத்தகைய சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி தொடர்ச்சியாக அந்த நீரை ஒரு மாதம் குடிக்க வேண்டும். அவ்வாறு செய்தால் செரிமானப் பிரச்னைகள் தீரும்.

சீரகத்தில் நார்ச் சத்து உள்ளதால் மலச் சிக்கலை தீர்க்கும். 

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சீரக நீரை குடித்து வந்தால் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.

இரும்புச் சத்து அதிகம் உள்ளதால், ரத்தச் சோகை நோய்க்கு தீர்வாக அமையும். சளி பிரச்னை உள்ளவர்கள், சீரக நீரை குடித்தால் சுவாசக் குழாயில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு பிரச்னைக்கு தீர்வு உண்டாகும்.

மேலும் வைட்டமின்கள், கரிமச் சத்துக்கள் ஏராளமாக உள்ளதால் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து நாள் முழுவதும் தேவைப்படும் நேரங்களில் குடித்து வரலாம். அதனால் அஜீரண கோளாறுகள் மறையும்.

click me!