உங்களுக்குத் தெரியுமா? சீரகத்தை வறுத்து பொடியாக்கி கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் இருமல் குணமாகும்...

 
Published : Dec 08, 2017, 02:24 PM ISTUpdated : Sep 19, 2018, 01:33 AM IST
உங்களுக்குத் தெரியுமா? சீரகத்தை வறுத்து பொடியாக்கி கல்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் இருமல் குணமாகும்...

சுருக்கம்

Do you know Cough is roasted and cooked with calcine.

தொண்டைப்புண் குறைய: 

சித்தரத்தை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

தலைவலி குறைய: 

கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

மூட்டு வலிகுறைய: 

கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலிஉள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டுவலி குறையும்.

காதுவலி குறைய: 

கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்று போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்.

கண் உஷ்ணம் குறைய: 

வெள்ளை நத்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.

வாய்ப்புண் குறைய: 

பலா இலையை எடுத்து சிறியதாக நறுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.

வலி குணமாக:

ஓமத்தை நீர் விட்டு அரைத்துக் களி போல் கிளறி இளஞ்சூட்டில், வீக்கம், வலியுள்ள இடங்களில் பற்றுப்போட குணமாகும்.

கண் குளிர்ச்சிக்கு: 

தாமரை இதழ்களை காய்ச்சி வடிகட்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து உண்டு வர கண் குளிர்ச்சியடையும், சூடு தணியும்.

கண் பார்வை தெளிவுபெற: 

பொண்ணாங்கண்ணி இலையை காலையில் மென்று தின்று பால் பருகி வர கண் பார்வை தெளிவு பெறும்.

ஆஸ்துமா குணமாக:

வில்வ இலைப் பொடி தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வர குணம் பெறலாம்.

இருமல் குணமாக:

சீரகத்தை பொன் வருவலாக வறுத்து பொடி செய்து கல்கண்டு சேர்த்துச் சாப்பிட இருமல் குணமாகும்.

PREV
click me!

Recommended Stories

உப்பு vs சர்க்கரை! தயிரில் எதை கலந்து சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு நல்லது?
Skipping Exercise : வெறும் 15 நிமிடங்கள் ஸ்கிப்பிங்.. எடை குறைப்பு முதல் நன்மைகளோ கோடி!!