நம்முடைய உடல் ஆரோக்கியத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது என்றால் அது வயிற்றுப் பகுதி தான். வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளால் தான் நமக்கு பல நோய்கள் உண்டாகின்றது. ஆகவே, வயிற்றின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதும் மிக அவசியமாகும். வயிற்றில் வலி இருந்தால் அது சாதாரண வலியா அல்லது தீவிர நோயின் அறிகுறியா என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
வயிற்று வலி எதனால் ஏற்படுகிறது?
- துரித உணவுகள், அதிக காரம் நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுப் பொருட்களால் வயிற்றில் வலி ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
- பித்தப்பை கற்கள், அல்சர் மற்றும் குடல் பகுதியில் ஏற்படும் தொந்தரவுகளினாலும் வயிற்றில் வலி உண்டாக வாய்ப்புள்ளது.
- வயிற்றில் வலி தொடர்ந்து ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது தான் மிகவும் நல்லது. வயிற்றில் வலி ஏற்பட்டால் உடனடியாக சரி செய்யக் கூடிய வீட்டு வைத்திய முறைகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
undefined
Banana: நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா? மருத்துவர்களின் அறிவுரை என்ன?
வயிற்று வலியை குறைக்கும் வைத்தியங்கள்
- இரவு நேரத்தில் மாதுளம் பழத்தின் தோலை தண்ணீரில் ஊற வைத்து, அடுத்த நாள் காலையில் அந்த தண்ணீரை குடிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் வயிற்று வலி குணமாகும்.
- ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீருடன் இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து குடிப்பது வயிற்று வலிக்கு நிவாரணத்தை தரும்.
- அரைத் தேக்கரண்டி ஓமம் மற்றும் கால் தேக்கரண்டி கருப்பு உப்பு ஆகிய இரண்டையும் சேர்த்து வாயில் போட்டு மென்று வந்தால் வயிற்று வலி மற்றும் வயிற்று உப்புசம் குணமாகி விடும்.
- வெந்தய விதைகளை வறுத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். அரைத் தேக்கரண்டி வெந்தயப் பொடியை ஒரு கிளாஸ் மோருடன் கலந்து, குடித்து வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி விடும்.
- கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீருடன் பெருங்காயப் பொடியைச் சேர்த்து குடித்து வந்தால் வயிற்று வலி விரைவில் குணமாகும்.
- இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி விட்டு தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்த பிறகு, அதனை வடிகட்டி குடித்தால் வயிற்று வலி சரியாகி விடும். இதே போன்று சீரகத்தையும் போட்டு குடித்து வந்தால் வயிற்று வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
முக்கிய குறிப்பு
மேற்கண்ட வீட்டு வைத்தியங்களை வயிற்று வலி இருந்தால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வயிற்று வலி அதிக நாட்கள் குறையாமல் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.