இனி வேக்ஸிங் வேண்டாம்! தேவையற்ற முடிகளைப் போக்கும் அற்புத இயற்கை வழி இதோ...

 
Published : Apr 18, 2018, 01:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:15 AM IST
இனி வேக்ஸிங் வேண்டாம்! தேவையற்ற முடிகளைப் போக்கும் அற்புத இயற்கை வழி இதோ...

சுருக்கம்

Do not worry now Heres the amazing natural way to get rid of unwanted hair ...

தற்போது முகம், கை, கால்கள் மட்டுமின்றி, உடலின் இதர பகுதிகளிலும் வளரும் முடியைப் போக்குவது ஃபேஷனாகிவிட்டது. 

சருமத்தை மென்மையாக பட்டுப் போன்று வைத்துக் கொள்ள, பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் வேக்ஸிங் செய்கிறார்கள். ஆனால், இந்த முறையால் கடுமையான வலியை அனுபவிக்கக்கூடும்

வலி இல்லாமல், பணம் அதிகம் செலவழிக்காமல் மிகவும் எளிய முறையில் உடலில் வளரும் தேவையற்ற முடிகளைப் போக்கும் ஓர் அற்புத இயற்கை வழி இதோ...


தேவையான பொருட்கள்: 

கடலை மாவு – 1 டேபிள் ஸ்பூன் 

சர்க்கரை பவுடர் – 2 டேபிள் ஸ்பூன் 

கற்றாழை ஜெல் – 1 டேபிள் ஸ்பூன் 

எலுமிச்சை சாறு – 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை 

#1 முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, சர்க்கரை பவுடர் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.


#2 பின்பு அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.


#3 பிறகு தயாரித்து வைத்துள்ள கலவையை முடியுள்ள பகுதியில் தடவி, அதன் மேல் காட்டனை வைக்க வேண்டும். இப்படி ஒரு 2-3 லேயர் போட வேண்டும்.

#4 பின் 30 நிமிடம் கழித்து, நன்கு காய்ந்த பின் உரித்து எடுக்க வேண்டும். இப்படி செய்வதால், முடி நீங்குவதோடு, அப்பகுதியும் பளிச்சென்று இருக்கும்.

PREV
click me!

Recommended Stories

Kidney Stone Symptoms : உங்க கிட்னில கல்லு இருக்குனு காட்டுற '4' அறிகுறிகள் இவைதான்; இதை அலட்சியம் பண்ணாதீங்க!
Winter Hair Fall : வெந்தயத்தை இப்படியும் யூஸ் பண்ணலாமா? குளிர்கால முடி உதிர்வைத் தடுக்க சூப்பர் வழி