தலைவலிக்கு மாத்திரை வேண்டாம். இந்த எளிய முறைகளை கடைப்பிடித்தாலே போதும்…

Asianet News Tamil  
Published : Sep 16, 2017, 11:51 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
தலைவலிக்கு மாத்திரை வேண்டாம். இந்த எளிய முறைகளை கடைப்பிடித்தாலே போதும்…

சுருக்கம்

Do not pills for headache This simple procedure is just enough ...

தலைவலிக்கு நீங்கள் வலிநிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்வது நிரந்தர தீர்வை தராது. மற்றும் இதனால் நிறைய பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே, எளிதாக தலைவலியில் இருந்து தீர்வுக் காண நீங்கள் இந்த எளிய முறைகளை பின்பற்றுவது தான் சிறந்தது…

வைட்டமின் பி2

குறைந்தது உங்கள் உணவு டயட்டில் வைட்டமின் பி2 அளவு 400 மி.கி இருப்பது தலைவலியை குறைக்க உதவும். சிக்கன், மீன், முட்டைகள், பால் உணவுகள், பச்சை உணவுகள் போன்றவற்றில் வைட்டமின் பி2 நிறைய இருக்கிறது.

வைட்டமின் பி3

வைட்டமின் பி3-யும் கூட தீராத தலை வலிக்கு நிவாரணம் அளிக்கிறதாம். கோதுமை, பச்சை காய்கறிகள், தக்காளி, நட்ஸ், மீன் போன்றவற்றில் வைட்டமின் பி3 சத்து அதிகமாக இருக்கிறது.

மெக்னீசியம்

தலைவலியை குறைக்கவல்ல சிறந்த சத்துகளில் அடுத்தபடியாக விளங்குவது மெக்னீசியம். மெக்னீசியம் நேரடியாக தலைவலிக்கு நல்ல தீர்வளிக்க கூடியது என்று கூறப்படுகிறது. டார்க் சாக்லேட், நட்ஸ், உலர் பழங்கள் போன்றவற்றில் மெக்னீசியம் சத்து நிறைய இருக்கிறது.

சிகிச்சைகள்

மூச்சு பயிற்சி, தலை மசாஜ், யோகா மற்றும் தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுவதால் தலை வலி குறைய நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

சின்ன வெங்காயம்

சின்ன வெங்காயத்தை நறுக்கி அதன் சாற்றை தலையில் தேய்ப்பதால் தலைவலியில் இருந்து சீக்கிரம் நிவாரணம் காண முடியும் என்று கூறப்படுகிறது. இது ஒருவகையான பாட்டி வைத்தியம்.

 

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake