கொரோனாவை விட கொடிய ஜாம்பி வைரஸா 'Disease X'? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையின் பின்னணி என்ன?

By Ma riya  |  First Published May 26, 2023, 3:28 PM IST

Disease X virus: கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டம் காட்டிய கொரோனா வைரஸை விடவும் கொடிய தொற்றுநோய் தாக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. 


Disease X virus: கொரோனா தொற்று தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் வேளையில் பல நோய்கள் அடுத்தடுத்து பீதியை கிளப்பி வருகிறது. இந்நிலையில் கொடிய தொற்று பரவ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உலக சுகாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம் சுவிட்சர்லாந்தில் நடந்தது. இதில் பங்கேற்று பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், "கொரோனாவை காட்டிலும் கொடிய தொற்றுநோய்க்கு உலகம் தயாராக வேண்டும். மேலும் ஒரு வைரஸின் அச்சுறுத்தல் காத்திருக்கிறது. இதனால் ஏராளமானோர் உயிர் இழக்க வாய்ப்புள்ளது. உலக நாடுகள் இதனை அலட்சியப்படுத்த முடியாது. இப்போது அடுத்த தொற்று நோயை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம்" என்றார். 

Tap to resize

Latest Videos

உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட வைரஸுகளின் பட்டியல்... 

உலக சுகாதார அமைப்பு ஆபத்தான நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் வைரஸுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

  • கோவிட் - 19
  • கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல்
  • எபோலா வைரஸ் நோய், மார்பர்க் வைரஸ் நோய்
  • லாசா காய்ச்சல்
  • மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி கொரோனா வைரஸ் (MERS-CoV), கடுமையான சுவாச நோய்க்குறி (SARS)
  • நிபா, ஹெனிபவைரல் நோய்கள்
  • ஜிகா வைரஸ் 
  • நோய் X அல்லது Disease X

Disease X என்றால் என்ன? 

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கையை தொடர்ந்து, அடுத்து வரவிருக்கும் நோய் தொற்று Disease 'X' என கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது விலங்குகளிடம் பரவக்கூடிய தொற்று நோயாகும். 

உலக சுகாதார அமைப்பின் தகவல்களின்படி, Disease 'X' என்ற நோய்தொற்று என்பது இன்னும் அறியப்படாத ஒரு நோய்க்கிருமி. இதனால் பெரியளவில் பாதிப்பு ஏற்படலாம். உலக சுகாதார நிறுவனம் (WHO) 2018ஆம் ஆண்டில் அறியப்படாத எந்தவொரு நோய்க்கும் Disease 'X' என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கியது. குறிப்பிடத்தக்க வகையில், ஒரு ஆண்டு கழித்து கோவிட்-19 ஒரு தொற்றுநோயை ஏற்படுத்தும் வைரஸாக உருவானது. 

இதையும் படிங்க: வீட்டில் கொசுக்கள் வராமல் தடுக்கும் செடிகள்!!

இந்நிலையில் மீண்டும் உலக சுகாதார அமைப்பு ஆபத்தான வைரஸுகளின் பட்டியலில் Disease X என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இது உலகளவில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய வைரஸ் ஜாம்பி வைரஸாக இருக்கலாம். இன்றைய காலநிலை மாற்றத்தில் ஜாம்பி வைரஸின் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

இதையும் படிங்க: செல்வம் செழிக்க ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போதும்!! இதை செய்தால் வீட்டில் உள்ள பணக்கஷ்டம் அத்தனையும் நீங்கும்!!

click me!