
காலையில் எழுந்ததும் பல் துலக்குவது நமது அன்றாட கடமைகளில் ஒன்று. ஆனால் காலையில் பல் துலக்குவதே வேஸ்ட் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று சொல்கிறது. மாலையில் பல் துலக்குவது தான் பெஸ்டாம்.
அதற்கு காரணங்கள் இதோ…
1.. பாக்டீரியாக்கள்!
இரவில் தான் பற்களில் அதிக கிருமிகளின் தாக்கம் ஏற்படும். மேலும், இரவில் தான் பாக்டீரியாக்கள் லாக்டிக் அமிலத்தை சுரக்கின்றன.
2.. லாக்டிக் அமிலம்!
லாக்டிக் அமிலம் நம்முடைய பற்களின் ஆரோக்கியத்தை சிதைத்து, பற்களில் சொத்தை மற்றும் இதர பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
3.. இரவில் கிருமிகள் தாக்கும்!
நாம் உறங்கிய அரை மணி நேரத்தில் கிருமிகள் பற்களின் ஆரோக்கியத்தை சிதைக்கும் வேலைகளில் இறங்கும். எனவே, உறங்குவதற்கு முன்னர் இரவில் பல் துலக்குவது தான் சரி என்று நிபுணர்களும் சொல்கிறார்கள்.
4.. காலையில் பல் துலக்கனுமா? வேண்டாமா?
காலையில் பல் துலக்குவதற்கு பதிலாக சுடு தண்ணீரில் கொஞ்சம் உப்பு சேர்த்து வாய் சுத்தம் செய்தாலே போதும்.
5.. எப்பவும் வேப்பங்க்குச்சி தான் பெஸ்ட்!
கண்ட பேஸ்ட், கண்ட பிரஷ் பயன்படுத்தி பற்களின் ஆரோக்கியத்தை சீரழிப்பதற்கு பதிலாக, நமது மூதாதையர் பயன்படுத்தியது போல வேப்பங்குச்சியை மென்று துப்பினால் பற்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியமும் சிறக்கும்.