வெள்ளரிக்காய் விட சிறந்த மருத்துவ குணம் வேறெதிலும் இல்லை.

 
Published : Jun 29, 2017, 06:11 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
வெள்ளரிக்காய் விட சிறந்த மருத்துவ குணம் வேறெதிலும் இல்லை.

சுருக்கம்

cucumber medical use

வெள்ளரிக்காய் சிறந்த மருத்துவ குணம் உள்ளது. இதை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதே சிறந்தது. காய்களில் குறைவான கலோரி அளவுள்ளது, வெள்ளரிக்காய் மட்டும்தான். 100 கிராம் வெள்ளரியில், 18கலோரி மட்டுமே உள்ளது. குளிர்ச்சியானது. சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்வது, இரைப்பையில் ஏற்படும் புண்ணையும் மலச்சிக்கலையும் குணப்படுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
 

பித்தம், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்து கோளாறுகளையும் குணமாக்குவதில் இக்காய் சிறந்தது. வெள்ளரி கீழ்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளையும் குணமாக்குவதில் வல்லமைமிக்க உணவாக திகழ்வது ஆய்வில் தெரியவந்துள்ளது. 100 கிராம் வெள்ளரிக்காயில் 96 சதவீதம் ஈரப்பதம் உள்ளது. மீதி நான்கு சதவீதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து,தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் "பி' ஆகியவை அமைந்துள்ளன; வைட்டமின் "சி'யும் சிறிதளவு உண்டு. இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கிறது. வெள்ளரியைச் சமைத்துச்சாப்பிடும் போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்து விடுகின்றன. காலரா நோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து, ஒருமணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் அருந்த வேண்டும். வறண்ட தோல், காய்ந்து விட்ட முகம் உள்ளவர்கள்,வெள்ளரிக்காய் சீசனில் தினமும் வெள்ளரிக்காய்ச் சாறு சாப்பிட்டு வறட்சித் தன்மையைப் போக்கலாம்.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும்; ஆற்றலையும் அதிகரிக்க செய்யும். இக்காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து ரத்தக் குழாய்களைத் தளர்த்தி உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க்கும் மலச்சிக்கலுக்காகச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவர். அதற்குப்பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றி எப்போதும் குடல் சுத்தமாய் இருக்கும்.
முகத்தில் உள்ள கரும் புள்ளிகள், வறண்ட தோல், பருக்கள் முதலியவை குணமாக காயை அரைத்து முகத்தில் பூசவேண்டும். பதினைந்து நிமிடங்கள் முகத்தில் இந்தப் பூச்சு இருக்கவேண்டும். தொடர்ந்து இந்த முறையில் பூசினால் முகம் அழகு பெறும்.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க