உங்களுக்குத் தெரியுமா? சூரிய ஒளிபடும் இடங்களில் வசிப்போரை மூட்டுவலி தாக்குவதில்லை…

 
Published : Jun 29, 2017, 01:24 PM ISTUpdated : Sep 19, 2018, 12:49 AM IST
உங்களுக்குத் தெரியுமா? சூரிய ஒளிபடும் இடங்களில் வசிப்போரை மூட்டுவலி தாக்குவதில்லை…

சுருக்கம்

Do you know The radiation does not attack residents in sunshine areas ...

வயதாகும்போது உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாமல் போய்விடுகிறது. உடல் இயக்கம் குறையும்போது மூட்டு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகின்றன.

40 வயதில் தொடங்கி வயது அதிகரிக்க அதிகரிக்க மூட்டுவலி நோய்களால் அவதிப்படுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

30 வயதுக்குள் அப்பாவாகி விடுகிறவர்கள், 60 வயதுக்குமேல் தாத்தாவாகி விடும்போது அனேகமானோர் வீட்டிற்குள்ளேயே அடங்கி விடுகின்றார்கள்.

உடல் உழைப்பு இல்லாமையும், கல்சியம் அடங்கிய உணவுகளை உண்ணாமையினாலும் இயல்பாக அவர்கள் உடல் தளர்ந்து, எலும்புகள் தேய்மானமாகி மூட்டு நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

முதுமை காரணமாக முதியவர்களின் உடல் உறுப்புகளும் முதிர்வால் ஆற்றகையும் இழந்து விடுவதும் முக்கிய காரணமாகும்.

இந்நோய் சத்து குறைபாட்டினாலும் இளம் வயதில் ஏற்படுகின்றது.

சூரிய ஒளிபடும் படியான இடங்களில் வசிப்போருக்கு அதிகமாக இந்நோய் தாக்குவதில்லை. சூரிய ஒளியில் விட்டமின் “டி” சக்தியை உடம்பு பெறுவதாலும், கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதாலும் எலும்புத் தேய்மானம் ஏற்படாது தடுத்துக் கொள்ளலாம்.

வயதாகும்போது உண்பது, உறங்குவது என்று வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். அதனால் உடல் உழைப்பும், உடற்பயிற்சியும் இல்லாமல் போய்விடுகிறது. உடல் இயக்கம் குறையும் போது மூட்டு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படத் தொடங்குகின்றன.

PREV
click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
Skin Damaging Foods : முகப்பருக்களே இல்லாத சருமத்திற்கு இதுதான் ஒரே வழி! இந்த 7 உணவுகளை உடனே நிறுத்துங்க