வாய் துர்நாற்றம் எதனால் வருகிறது? அதனைப் போக்க சில டிப்ஸ்…

 |  First Published Jun 29, 2017, 1:21 PM IST
bad smell in mouth? use this steps to solve



உடலில் உள்ள பிரச்னைகளில் மிக மோசமானதும், சகிக்க முடியாததும் என்றால் அது வாய் துர்நாற்றம் தான். இதனால் மற்றவர்கள் அருகில் வரவே பயப்படுவார்கள்,

பல் சொத்தை, தீய பழக்க வழக்கங்கள், சரியாக பல் விலக்காதது, வாய் உலர்ந்து போவது மற்றும் வெற்றிலை பாக்கு போடுவது என பலவித காரணங்கள் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது.

Latest Videos

undefined

இதுதவிர சுவாசக்குழாய் பாதிப்பு, நிமோனியா, ப்ராங்கைட்டிஸ் சர்க்கரை நோய், ஈறு நோய், குடல் நோய் மற்றும் சிறுநீரக கோளாறுகளும் காரணமாக இருக்கலாம்.

வாய் துர்நாற்றத்தைப் போக்க

* முதலில் காலை, மாலை 2 வேளையும் நன்றாக பல் துலக்க வேண்டும்.

* சாப்பிட்ட பின்னர் நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்,

மவுத் வாஷ், உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாம்.

* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டூத் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.

* புகை பிடிப்பது மற்றும் புகையிலை பொருட்களை தவிர்க்க வேண்டும்.

* பல்செட் பயன்படுத்தும் நபராக இருப்பின், இரவில் தூங்கும்போது கழற்றி தனியாக ஒரு கப்பில் வைத்து விட வேண்டும்.

பல்செட்டில் இயற்கையாகவே நுண் துளைகள் இருப்பதால், சுத்தம் செய்யக்கூடிய கிருமிநாசினியை பயன்படுத்தி சுத்தம் செய்வது அவசியம்.

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் வெற்றிலையை வாயில் அடக்குவது போல கிராம்பை மென்று வாயில் அடக்கிக்கொள்ளலாம்.

அரை லிட்டர் நீரில் புதினா சாறு(Mint juice), எலுமிச்சை சாறு (Lime juice) ஆகியவற்றைக் கலந்து வாய் கொப்பளிக்கலாம் இதனால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

வாய் துர்நாற்றத்தைப் போக்க எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து அதில் சிறிதளவு உப்புச் சேர்த்து குடித்து வரலாம். இந்தக் கலவையை வாயிலிட்டு கொப்புளிக்க வாய் துர்நாற்றம் நீங்கும்.

அதிக காரம், அதிக புளிப்பு உள்ள உணவு வகைகளை தவிர்ப்பதால் வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்கலாம்.

கொத்தமல்லிக் கீரையை (Coriander leaves) வாயில் போட்டு மென்றுவர வாய் துர்நாற்றம் நீங்கும்.

click me!