Cooking Tips : இந்த 'ரகசியம்' தெரிஞ்சவங்க சமையல்ல கில்லாடியா ஆகிடுவங்க! ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க

Published : Jan 02, 2026, 04:43 PM IST
cooking tips

சுருக்கம்

இல்லத்தரசிகளே உங்கள் சமையலை ருசியாகவும், மிகவும் வேகமாக முடிக்க உதவும் சூப்பரான சில கிச்சன் டிப்ஸ்கள் இங்கே.

இல்லத்தரசிகளே.. கிச்சனில் மணிக்கணக்காக நின்று சமைப்பது சலிப்பாக இருக்கிறதா? இனி அது குறித்து கவலைப்பட வேண்டாம். உங்களது சமையலை மிகவும் ருசியாகவும் அதே சமயம் வேகமாகவும் முடிக்க உதவும் சிம்பிளான சில கிச்சன் டிப்ஸ்கள் இதோ உங்களுக்காக...

1. தக்காளி சட்னி வைக்கும் போது சிறிதளவு கத்தரிக்காயை வதக்கி அதனுடன் அரைத்தால் தக்காளி சட்னி கெட்டியாகவும், சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும்.

2. தோசை மாவு தண்ணீர் அதிகமாகினால் கொஞ்சமாக வடித்த சாதத்தை மிக்ஸியில் நன்கு அரைத்து அதை தோசை மாவுடன் சேர்க்கவும்.

3. சாதம் வடித்த கஞ்சியில் சிறிதளவு நெய் மற்றும் சீரகம் சேர்த்து குடித்து வந்தால் இடுப்பு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4. மட்டனை குக்கரில் வேகவைக்கும் பொழுது அதில் ஒரு துண்டு பப்பாளி காய் அல்லது சிறிதளவு தயிர் சேர்த்து வேக வைத்தால் மட்டன் பஞ்சு போல மென்மையாக வெந்திருக்கும்.

5. சிக்கனை நன்கு கழுவிய பிறகு அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி சுமார் அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு சமைத்தால் சிக்கன் ரொம்பவே சாப்ட்டாக இருக்கும்.

6. சேமியாவை இட்லி பாத்திரத்தில் வேகவைத்து பிறகு உப்புமா தயாரித்தால் சேமியா ஒன்றோடொன்று ஒட்டாமல் உரிதியாக வரும்.

7. தக்காளி சாதம் தயாரிக்கும் போது தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சமைத்தால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

8. குழம்பில் புளி அதிகமாகிவிட்டால் அரை கப் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி விடுங்கள். புளிப்பு தன்மை குறைந்துவிடும்.

9. அப்பளம் பொரிக்கும் முன் அப்பளத்தின் இரண்டு பக்கங்களையும் ஒரு துணி கொண்டு துடைத்துவிட்டு பிறகு பொரித்தால் எண்ணெய் கருப்பாகமாறாது.

10. இடியாப்பம் ஒட்டாமல் பஞ்சு போல் வர இடியாப்பத்திற்கு மாவு பிசையும் போது அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து பிசையவும்.

11. நமத்து போன அப்பளத்தை சின்னதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்தால் மீண்டும் மொரு மொருப்பாகும்.

12. பாசிப்பருப்பு குழம்பு வைத்த பின் இறுதியாக தாளிக்கும் போது பச்சை மிளகாய் சேர்த்து தாளித்தால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

13. வெண்பொங்கல் வைக்கும் போது அரிசியை லேசாக வறுத்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு வெண்பொங்கல் செய்தால் சாதம் நன்கு குழைந்து இருக்கும். சாப்பிடுவதற்கும் ருசியாக இருக்கும்.

14. முருங்கைக்காய், சின்ன வெங்காய, மிளகு ஆகியவற்றை ஒன்றாக வதக்கி அரைத்து அதை தோசை மாவில் கலந்து தோசை சுட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். சத்தானதும் கூட.

15. நண்டு குழம்பு வைக்கும் போது அதன் நிறம் சிவப்பாக மாறினால் நண்டு நன்றாக வெந்துவிட்டது என்பதன் அர்த்தம்.

16. கீரையை சாதாரண நீரில் மூன்று முறை கழுவியப் பிறகு கடைசியாக சூடான நீரில் முக்கி எடுத்தால் போதும். அதில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத புழுக்கள் வெளியே வந்துவிடும்.

17. பூரி மாவு பிசையும் போது அதில் சிறிதளவு ரவை சேர்த்து பிசைந்தால் பூரி புசுபுசுன்னு வரும்.

18. சாம்பார் நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்க பருப்பை வேக வைக்கும் போது அதனுடன் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

19. மீண்டுபோன சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைக்கும் போது சிறிதளவு உப்பும் சேர்த்துக் கொள்ளுங்கள். சாதம் கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும்.

20. தோசை மாவு அதிகமாக புளித்து விட்டால் அதில் பச்சை மிளகாய், வெங்காயம், கருவேப்பிலை, தேங்காய் சேர்த்து சுவையான பணியாரம் செய்து சாப்பிடுங்கள்.

21. கோதுமை மாவில் பரோட்டா செய்யும் செய்யும்போது அதில் ஒரு ஸ்பூன் ஓமம் சேர்க்கவும். பரோட்டா சாப்பிடுவதற்கு சுவையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகிவிடும்.

22. மோர் குழம்பு வைக்கும் போது ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி அதில் சேர்த்தால் ருசியாகவும், வாசனையாகவும் இருக்கும்.

23. ஆப்பம் மாவு அரைக்கும் போது அதில் தேங்காய் தண்ணீர் சேர்த்து அரைத்தால் ஆப்பம் மிருதுவாகவும், ருசியாகவும் இருக்கும்.

24. சப்பாத்தி மாவு பிசையும் போது அதில் இரண்டு ஸ்பூன் தயிர் சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி சாப்டாக இருக்கும்.

25. முட்டை வேக வைக்கும் போது அதில் இரண்டு சொட்டு வினிகர் சேர்த்து வேக வைத்தால் முட்டை உடையாமல் அப்படியே இருக்கும்.

26. வடகம், வத்தல் பொரிக்கும் போது குறுகிய குழி கொண்ட வாணலியை பயன்படுத்தினால் எண்ணெய் குறைவாக செலவாகும்.

27. வெங்காய சாம்பார் வைக்கும் போது தேங்காயுடன் வெங்காயத்தை வதக்கி அரைத்து குழம்பில் சேர்த்தால் சாம்பார் சாப்பிடுவதற்கு ரொம்பவே சுவையாக இருக்கும்.

28. வெண்டைக்காய் வதக்கும் போது அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்தால் வெண்டைக்காய் ஒட்டாது. சுவையும் கூடும்.

29. தேங்காய் துவையல் அரைக்கும் போது அதில் சிறிதளவு பிரஷ்ஷான இஞ்சி சேர்த்து அரைத்தால் துவையல் சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

30. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிதளவு வறுத்த எள்ளை பொடியாக்கி சேர்க்கவும். சுவை அட்டகாசமாக இருக்கும்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Chicken vs Fish : சிக்கனை விட 'மீன்' தான் நல்லதா? இரண்டில் எதுல ஊட்டச்சத்து அதிகம் இருக்கு?
600 கிலோ எடை.. 400 கிலோவை குறைச்சு சாதிச்ச மனுஷன்.. கடைசியில இப்படி ஆகிடுச்சே!