பித்தப்பையில் கல் வராமல் தவிர்ப்பது எப்படி- இயற்கை வழியில் தீர்வு..!!

By Dinesh TGFirst Published Sep 24, 2022, 2:55 PM IST
Highlights

கொலஸ்ட்றால் காரணமாகவே பித்தப்பையில் கல் உண்டாகுகிறது. ஆனால் கொழுப்பு உணவுகளை சாப்பிடுவதற்கும், பித்தப்பை கல்லுக்கும் சம்மந்தமே கிடையாது. அதே சமயத்தில் அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது பித்தப்பையில் கல் ஏற்படுவதை தடுக்கும் என்பதே மருத்துவர்கள் கூறும் உண்மை. 
 

மனித இனம் தோன்றும் போதே, பித்தப்பை கல் சார்ந்த உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டுவிட்டது. கிறிஸ்து பிறப்பதற்கு 1300 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் புதைக்கப்பட்ட,  மம்மியின் பித்தப்பையில் கற்கள் இருந்துள்ளன. இது அகழ்வாராய்சி மூலம் தெரியவந்தது. உலகம் போற்றும் வீரராக வலம் வந்த மாவீரன் அலெக்சாண்டர் இறந்துபோனதற்கும் பித்தப்பை கற்கள் தான் காரணம் என்று ஆய்வுக் குறிப்புகள் கூறுகின்றன. நமது உடலில் சேரும் கொழுப்பை செரிமானப்படுத்த, கல்லீரலில் இருந்து பைல் ஜூஸ் என்கிற பித்த நீர் வெளியேறுகிறது. கல்லீரலில் இருந்து வெளியேறும் பித்த நீரை, பித்தப் பை சேகரித்துக்கொள்ளும். பித்த நீரில் அதிகமாக கொழுப்பு சுரந்தால் பித்தப் பையில் கல் வரும். ஒரு சிலருக்கு பித்தப் பையின் நகரும்தன்மையில் பிரச்னையிருந்தால், பித்தப் பையில் கற்கள் ஏற்படலாம்.

யாருக்கெல்லாம் பாதிப்பு?

பெண்கள், உடல் பருமனாக இருப்பவர்கள், 40 வயதை கடந்தவர்கள் மற்றும் குழந்தை பிரசவம் நடந்த பெண்கள் உள்ளிட்டோருக்கு பித்தப் பையில் கற்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது. இன்சூலின் எதிர்ப்புத்தன்மை காரணமாக பித்த நீர் சுரப்பது அதிகளவில் இருக்கும். அதனால் நீரிழிவு நோய் கொண்டவர்களுக்கு பித்தப்பை கல் உருவாகக்கூடும். மேலும் குழந்தைப் பேறு அடைந்த பெண்களுக்கு பித்த நீர் அதிகளவில் சுரக்கும். அப்போது அவர்களுக்கும் பித்தப்பையில் கல் உருவாகலாம். 

இரண்டு வகை கொழுப்புகள் பித்தப் பை கல் பாதிப்புக்கு வித்திடுகிறது

கொலஸ்ட்ரால் பாதிப்பு கொண்டவர்களில் எல்.டி.எல் கொழுப்புத்தன்மை அதிகம் கொண்டவர்களுக்கு பித்தப் பை பாதிப்பு ஏற்படுவது கிடையாது. ஆனால் ட்ரைகிளைசிரைடு கொழுப்பை அதிகமாக கொண்டவர்களுக்கும், ஹெ.டி.எல் கொழுப்பை அதிகமாகக் கொண்டவர்களுக்கும் பித்தப் பையில் கற்கள் உருவாக அதிகம் வாய்ப்புள்ளது.

அதிக கொழுப்பு பித்தப் பையில் கற்களை உருவாக்காது

அதிகளவில் கொழுப்பு உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பையில் கல் உருவாகாது. இதுதொடபாக பலதரப்பட்ட ஆய்வுகள் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் ந்த முடிவை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் கொழுப்பு மிக குறைவாகவும் அதிக மாவுச் சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது பித்தப் பை கல் உருவாகும் வாய்ப்பு அதிகமாகிறது.

அடிக்கடி தசை வலி, உடல் சோர்வு ஏற்படுகிறதா? உஷார்... மெக்னீஷியம் குறைபாடாக இருக்கலாம்..!!

உடல் எடை குறைப்பு செயல்பாட்டில் இருப்பவர்கள் கவனத்துக்கு

மிகவும் குறைந்தளவில் உணவு எடுத்துக்கொண்டு, உடல் எடையை குறைக்கும் செயல்பாட்டில் இருப்பவர்களுக்கு பித்தப்பையில் கற்கள் உருவாக அதிகம் வாய்ப்புள்ளது. ஆங்கிலத்தில் இந்த பத்திய முறை Low Fat Low Calorie Diet என்று கூறப்படுகிறது. இந்த முறையை பின்பற்றி உடல் எடையை குறைக்கும் போது, பித்தப் பைக்கு வேலையில்லாமல் போய்விடுகிறது. அப்போது சேகரிக்கப்பட்ட பித்தநீர் அனைத்தும் பித்தப் பையில் தங்கிவிடும். இதனால் அவர்களுக்கு பித்தப் பை கல் உருவாகிவிடுகிறது. அதன்காரணமாகவே இந்த பத்திய முறையை மருத்துவர்கள் யாரும் பரிந்துரைப்பது கிடையாது.

இனி தலைமுடிக்கு ‘டை’ அடிக்காதீங்க..!! இதை செய்யுங்க போதும்..!!

பித்தப்பை கல் பாதிப்புக்கான அறிகுறி

வெறும் பித்தப்பையில் கல் இருக்கும் பட்சத்தில், அதற்கான அறிகுறிகள் தெரியவராது. அந்த கற்கள் பித்தப் பையில் இருந்து குடலுக்கு செல்லும் வழிப் பாதையை அடைக்கும் போது மட்டுமே அறிகுறிகள் நமக்கு தெரிய வரும். பெரும்பாலான பித்தப் பை பாதிப்புகள் இப்படித்தான் கண்டறியப்படுகிறதும். விலா எலும்புக்கு கீழ் தான் பித்தப் பை உள்ளது. அப்போது அடைப்பு ஏற்படும் போது, அந்த இடத்தில் வலி அதிகமாக வரும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால், பித்தப் பை நன்றாக வீங்கி கோலீசிஸ்டைட்டிஸ் என்கிற நோய் ஏற்படுகிறது. ஒருசில நேரங்களில் மஞ்சள் காமாலை பாதிப்பும் ஏற்படலாம். 

click me!