கவலையின்றி வாழ இயற்கைச் சுத்திகரிப்பான்கள் இருக்கு…

Asianet News Tamil  
Published : Oct 07, 2016, 05:17 AM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
கவலையின்றி வாழ இயற்கைச் சுத்திகரிப்பான்கள் இருக்கு…

சுருக்கம்

எத்தனையோ விதவிதமான செயற்கை சுத்திகரிப்பான்கள் சந்தைக்கு வந்து கொண்டே இருந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. 

ஏனென்றால், அது விலையும் குறைவு. உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வித தீங்கும் விளைவிக்காது. இப்போ இயற்க்கை சுத்திகரிப்பான்கள் பற்றி பார்ப்போம். 

மண் பாணை:

நம் முன்னோர்கள் உபயோகித்த மண்பாண்டமே மிக சிறந்த அளவில் நீரை சுத்திகரிப்பதோடு, நீரை குளிர்விக்கவும் பயன்படுகிறது. இயற்கை தந்த பியூரிபையர்கள் அத்தனையும் நமக்குக் கிடைத்த வரம்.

முருங்கை விதை:

தேத்தான் கொட்டையைப் போலவே முருங்கை விதையும் நீரில் உள்ள பாக்டீரியாக்களை நீக்கி தூய்மையான நீரை தந்து விடும். இரவு படுக்கும் முன் நீரில் போட்டுவிட்டு, காலையில் நீரை வடிக்கட்டி குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

துளசி:

துளசியில் இல்லாத சத்துகளே இல்லை. மிகச் சிறந்த கிருமி நாசினி. இதைத் தினமும் பருகினால், எந்தவொரு நோயும் நம்மை நெருங்காது.

செப்புப் பாத்திரம்:

உள்ளே ஈயம் பூசப்படாத செப்புக் குடத்தில் நீரை நிரப்பிப் பருகினால், உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும். செப்புக் குடம் இல்லாதவர்கள், செப்பு காசுகளைத் தண்ணீரில் போட்டு வைத்துகூட உபயோகிக்கலாம். அலுமினியம் பாத்திரத்தில் நீர் வைப்பதை தவிர்த்துச் செப்பு குடத்தினுள் நீரைவைத்தால், நீரில் உள்ள அத்தனை கிருமிகளையும் அடியோடு நீக்கிவிடும்.

வாழைப்பழத் தோல்:

வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்பதைச் சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத்தோல் 90 சதவிகிதம் உறிஞ்சிவிடும். செலவும் குறைவு என்பதோடு, ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம்.

வெட்டிவேர் மற்றும் நன்னாரி:

நீரில் வெட்டிவேர் மற்றும் நன்னாரி வேரைத் துணியில் முடிச்சாகக் கட்டி போட்டு, பின்னர் அந்த நீரினைப் பருகினால் கோடைக் காலத்தில் ஏற்படும் அதிகத் தாகத்தைத் தீர்ப்பதோடு, உடல் வெப்பத்தையும் குறைக்கும்.

PREV
click me!

Recommended Stories

No Maida ❌ No refined Sugar ❌ | சர்க்கரை வள்ளி கிழங்கு அல்வா | Healthy Sweet Recipe in Tamil
டயட்டில் இருப்பவரா நீங்கள்.? வெள்ளை அரிசி vs பழுப்பு அரிசி – எது எடை குறைக்க உதவும்?