புற்றுநோயை கட்டுப்படுத்தும் அரிய வகை புல்- ஆய்வில் நடந்த அதிசியம்..!!

Published : Dec 20, 2022, 05:18 PM IST
புற்றுநோயை கட்டுப்படுத்தும் அரிய வகை புல்- ஆய்வில் நடந்த அதிசியம்..!!

சுருக்கம்

உலகளவிலுள்ள புற்றுநோய் நோயாளிகளில் 20 சதவீதம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தான். ஆண்டுதோறும் இந்நோய் பாதிப்பால் 75 ஆயிரம் பேரை உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உணவுப் பழக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் புற்றுநோய் பாதிப்பை வராமல் தடுக்கலாம். இந்நிலையில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் மூலிகையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.  

உடலின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படலாம். அதற்கு மரணம் ஒன்று தான் தீர்வு என்று நினைத்துவிடக்கூடாது. சில புற்றுநோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். அதற்கு என சில சிகிச்சை முறைகள் உண்டு. உயிருக்கு ஆபத்தான இந்த நோய் குறிப்பிட்ட டி.என்.ஏ செல்கள் அதிகரிப்பதால் ஏற்படுகிறது. புற்று நோய் வந்தால் உடலில் பல வகையான அறிகுறிகள் தென்படத் தொடங்கும். ஆரம்ப நிலை அறிகுறிகளை கவனிக்காமல் விட்டுவிட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட மாறும் கடைசி கட்டத்திற்குச் சென்றால், மரணத்தைத் தவிர வேறு எதுவும் நடக்காது. 

அத்தகைய சூழ்நிலையில், ஆரம்ப நிலையில் அடையாளம் காணப்பட்டால், பாதிப்பை தவிர்க்கலாம். சில உணவு முறைகள் புற்றுநோயின் வளர்ச்சியைத் தடுக்கும் திறன் கொண்டவை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் கோதுமைப் புல் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பல ஆச்சரியமான நன்மைகள் தெரியவந்துள்ளன. கோதுமைப் புல்லை உணவில் சேர்த்துக் கொள்வதால், இரத்தத்தில் உள்ள புற்றுநோய் செல்களை 65 சதவீதம் வரை கட்டுப்படுத்தலாம் என தெரியவந்துள்ளது.

கிறிஸ்துமஸுக்கு தயாரிக்கப்படும் விசேஷமான கேக்- தெரியுமா உங்களுக்கு..?

இதுதொடர்பான National Centre for Biotechnology Information வெளியிட்ட ஆய்வில், கோதுமை புற்களை சாப்பிட்ட 72 மணிநேரங்களில் 65 சதவீதம் வரையிலான லுகேமியா உயிரணுக்கள் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு, கோதுமை புல் நுகர்வு புற்றுநோயைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

கோதுமைப் புல்லில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் புரதம் அதிகளவில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது ரத்தத்தில் ஆக்சிஜனை போதுமான அளவில் வழங்குகிறது. அதை சாப்பிடும் போது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரித்து காணப்படுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் புற்றுநோய் செல்கள் வேகமாக வளரும். அத்தகைய சூழ்நிலையில், கோதுமை புல்லை உட்கொள்ளும் போது நல்ல பலன் கிடைக்கிறது.

கோதுமைப் புற்களில் புற்றுநோயைத் தடுக்கும் பண்புகளுடன் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைய உள்ளன. இது தவிர, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, குளுதாதயோன், இரும்பு, மெக்னீசியம், கால்சியம், பைட்டோநியூட்ரியண்ட்ஸ், அமினோ அமிலங்கள் மற்றும் பி காம்ப்ளக்ஸ், குளோரோபில் மற்றும் புரதங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த சூப்பர்ஃபுட்டை பல வழிகளில் சாப்பிடலாம். அதன்படி கோதுமைப் புற்களை பச்சையாகவும் சாப்பிடலாம், காயவைத்து பொடி செய்து தண்ணீரில் கலக்கி சாறாக அருந்தலாம். ஸ்மூத்தி அல்லது ஜூஸ் தயாரித்து குடிக்கலாம் அல்லது காப்ஸ்யூல் வடிவிலும் எடுத்துக்கொள்ளலாம். அதனால் ரத்தத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை கொண்டவர்கள், கோதுமைப் புற்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவது உரிய முறையில் நன்மை பயக்கும்.
 

PREV
click me!

Recommended Stories

Hair Care : தலைக்கு குளிச்சிட்டு ரொம்ப நேரம் டவலை தலையில் கட்டுவீங்களா? இந்த 3 பிரச்சனைகள் வரும்!
Kidney Stone Symptoms : உங்க கிட்னில கல்லு இருக்குனு காட்டுற '4' அறிகுறிகள் இவைதான்; இதை அலட்சியம் பண்ணாதீங்க!