வாய் துர்நாற்றத்தால் நண்பர்களிடம் கூட பேச முடியவில்லையா? கவலை வேண்டாம்! இதோ டிப்ஸ்...

Asianet News Tamil  
Published : Jun 21, 2018, 03:53 PM ISTUpdated : Sep 19, 2018, 02:33 AM IST
வாய் துர்நாற்றத்தால் நண்பர்களிடம் கூட பேச முடியவில்லையா? கவலை வேண்டாம்! இதோ டிப்ஸ்...

சுருக்கம்

Can not you talk to friends even by the odor of odor? do not worry! Here are tips ...

வாய் துர்நாற்றம் 

வாய் துர்நாற்றம் கடுமையாக இருக்கும் போது, எலுமிச்சை கலந்த இந்த மௌத் வாஷ் வாய் துர்நாற்றத்தைப் போக்குவதோடு, வாயின் முழு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

தேவையான பொருட்கள்

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

பட்டைத் தூள் – 1 டீஸ்பூன்

தேன் – 2 டீஸ்பூன்

செய்முறை

எலுமிச்சை சாறு, பட்டைத் தூள் மற்றும் தேன் ஆகிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் தேவைப்பட்டால் சிறிது தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். தினமும் பிரஷ் செய்யும் முன் இந்த மௌத் வாஷைக் கொண்டு வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

இதேபோல தினமும் இரண்டு முறை செய்து வந்தால், வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.

நன்மைகள்

** எலுமிச்சை இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை கொண்டிருப்பதால், இது பற்களில் படிந்துள்ள கறைகளைப் போக்குவதோடு, வாயிற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.

** தேன் வாயில் எச்சியின் உற்பத்தியை அதிகரித்து, வாயில் கடுமையான வறட்சியானல் ஏற்படும் துர்நாற்றத்தை தடுக்க உதவுகிறது.

** இயற்கையாக தயாரிக்கப்படும் இந்த மௌத் வாஷில் பட்டை சேர்க்கப்படுவதால், இது வாயில் ஏற்படும் கடுமையான துர்நாற்றத்தைத் தடுக்கிறது.

PREV
click me!

Recommended Stories

Bad Breath : மோசமான வாய் துர்நாற்றத்தால் பேசவே கூச்சமா? இந்த உணவுகளை சாப்பிட்டால் கெட்டவாடை நீங்கும்
Fennel Seeds Benefits : சோம்புக்கு இவ்வளவு சக்தியா? தொப்பையை குறைக்க சிறந்த தேர்வு! எப்படி சாப்பிட்டால் எடை குறையும்?