உங்களுக்குத் தெரியுமா?அறுவதா இலையை நெருப்பிலிட்டு புகையை சுவாசிக்க இருமல் தணியும்...

 
Published : Dec 29, 2017, 12:46 PM ISTUpdated : Sep 19, 2018, 01:45 AM IST
உங்களுக்குத் தெரியுமா?அறுவதா இலையை நெருப்பிலிட்டு புகையை சுவாசிக்க இருமல் தணியும்...

சுருக்கம்

Burning the aruvatha leaf and smell smoke will cure cough

அறுவதா

** மலைப்பாங்கான இடங்களில் வளரும் மணமுடைய பசுமையான குறுஞ்செடி. சதாப்பு இலை என்றும் வழங்கப்பெறும். இதன் இலை மருத்துவப் பயனுடையது.

** வலி போக்குதல், வெப்பமுண்டாக்கல், கோழையகற்றுதல், மாதவிலக்கு உண்டாக்குதல் ஆகிய மருத்துவப் குணங்களை உடையது.

** இலைச் சாற்றில் 10 துளியைத் தாய்ப்பாலுடன் கலந்து சிறுகுழந்தைகளுக்குக் கொடுக்க சளியை வெளியேற்றி காய்ச்சல் இசிவு ஆகியவற்றைப் போக்கும்.

** இலையுடன் கால்பங்கு மஞ்சள் சேர்த்து அரைத்துக் குழந்தைகள் உடலில் பூசிக் குளிப்பாட்டி வர, சளி, நீர்க்கோவை முதலிய குளிர்ச்சி நோய்கள் வராமல் தடுக்கும்.

** இலையைப் பொடித்து வைத்துக் கொண்டு வயதிற்கு ஏற்ப ¼ முதல் 1 தேக்கரண்டி வரை தேனில் குழைத்துக் கொடுத்து வர வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, சொரியாமை, நாட்பட்ட மார்புசளி, பால்மந்தம், மாந்த சுரம், கணை, வயிற்றுப்போக்கு ஆகியவை நீங்கும்.

** உலர்ந்த அறுவதா இலையை நெருப்பிலிட்டு புகையை மென்மையாகக் சுவாசிக்க இருமல் தணியும்.

PREV
click me!

Recommended Stories

Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க
Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!