பிராய்லர் கோழி சாப்பிடுவதால் ஆண், பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான சில பிரச்சனைகள்…

First Published Oct 10, 2017, 1:26 PM IST
Highlights
Broiler chicken is eating some important issues for men and women ...


பிராய்லர் கோழி சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்

பிராய்லர் கோழி யாரும் சாப்பிடவேண்டாம். அதனை சாப்பிடுவதனால் அதிகமாக உடம்பு எடை அதிகமாகிறது.

மிக குறைந்த வயதில் பெண்கள் பருவம் அடைகின்றனர்.

மாதவிடாய் நேரங்கள் சரியாக வருவதில்லை. அதாவது குறிப்பிட்ட கால அளவுக்குள் சரியாக வருவது கிடையாது. இதனால் பல்வேறு உடல் ரீதியான பிரச்சனைகளை பெண்கள் சந்திக்க வேண்டியுள்ளது.

மிக குறைந்த வயதில் கர்ப்பப்பை பிரச்சினைகளை பெண்கள் சந்திக்க வேண்டி உள்ளது.  பெண்கள் சிறு வயதிலேயே பிராய்லர் கறி கோழி சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். உங்கள் உடம்புக்கு நல்லது.

உணவில் நல்ல அதிக அளவு காய்கறி எடுத்து கொள்ளுங்கள்.

கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளுக்கு செலுத்துகிறார்கள். அதனால் அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. பெண்குழந்தைகள் பத்து பதினோரு வயதிலேயே பருவமடைந்து விடுகிறார்கள்.

தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

இரும்பு சத்துள்ள முருங்கை கீரை, உளுந்த கஞ்சி, மாதுளம் பழம், எல்லா சத்தும் நிறைந்த பழமான கொய்யபழம் போன்றவற்றை உணவில் அதிக அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

நவ்வாப்பழம் சாப்பிடுவதால் உடல் சூட்டை நன்றாக குறைக்கும்.

click me!