குளிர்காலத்தில் ரத்த நாளங்களுக்கு ஏற்படும் பாதிப்பு- கவனமாக இருங்கள்..!!

By Dinesh TGFirst Published Dec 9, 2022, 6:39 PM IST
Highlights

குளிர் நாட்களில், உடலில் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் இருதயம் ரத்தத்தை உடல் பாகங்களுக்கு செலுத்துவதற்கு கடினமாக உழைக்கும். இதனால் ரத்த நாளுங்களும் அதிகளவு வேலை பார்க்க நேரிடும்.
 

உடலிலுள்ள அனைத்து பகுதிகளும் சரியாக இயங்குவதற்கு ஆண்டிஆக்சிடண்ட் கொண்ட ரத்தம் தேவைப்படுகிறது. இதை 60,000 இரத்த நாளங்கள் மூலம் இருதயம் உடலின் பல பாகங்களுக்கு கொண்டு செல்கிறது. ஆனால் ரத்த விநியோகம் குறைவாக இருக்கும் போது, இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் உடலின் செல்கள் ஆக்ஸிஜன் மற்றும் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெறமுடியாமல் போகிறது. 

ரத்தக் குழாய்களில் அழுக்கு கொழுப்பு படிந்து, இரத்தக் கட்டிகள் உருவாகத் தொடங்கும் போது அல்லது இரத்த நாளங்கள் சுருங்கத் தொடங்கும் போது, ரத்த ஓட்டம் குறைகிறது. இந்த காரணங்கள் அனைத்தும் உங்கள் மருத்துவ நிலை அல்லது மோசமான வாழ்க்கை முறையின் விளைவாகும். ஆனால் குளிர்ந்த காலங்களில் ரத்த நாளங்கள் பொதுவாகவே  சுருங்க ஆரம்பிக்கும். இது சில சந்தர்ப்பங்களில் பக்கவாதம் அல்லது மாரடைப்புக்கு கூட வழிவகுக்கும்.

இதனால் ஏற்கனவே இருதய பாதிப்பு கொண்டவர்கள், குறிப்பிட்ட காலக்கட்டத்தில் கவனமாக செயல்பட வேண்டும். அதனால் உடலில் ரத்த ஓட்டம் குறையும் போது நடைபயிற்சி போது தசை வலி, கூச்ச உணர்வு, சருமம் மஞ்சள் அல்லது நீல நிறத்தில் மாறுவது, குளிர்ந்த விரல்கள் மற்றும் நரம்புகளில் வீக்கம் போன்றவை முக்கிய அறிகுறிகள் ஆகும். அதனால் குறிப்பிட்ட அறிகுறிகள் தோன்றும் போது, உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

சிகரெட், எலக்ட்ரானிக் சிகரெட் மற்றும் புகையிலை ஆகியவற்றில் நிகோடின் உள்ளது. இது உங்கள் இரத்த நாளங்களின் சுவர்களை சேதப்படுத்துகிறது மற்றும் உங்கள் இரத்தத்தை தடிமனாக்குகிறது, இதனால் அது சரியாக ஓட முடியாது. அதனால் உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கமிருந்தால், அதை விட்டுவிடுங்கள். ரத்தத்தில் பாதி தண்ணீர் தான் உள்ளது. எனவே, அது தொடர்ந்து ஓடுவதற்கு நீங்கள் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் உடற்பயிற்சி செய்தால், மேலும் அதிக தண்ணீர் குடிக்கவும்.

பால் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது- காரணம் இதுதான்..!!

உயர் இரத்த அழுத்தம் தமனிகளை உள்ளடக்கிய செல்களை சேதப்படுத்தும். உணவில் இருந்து கொழுப்புகள் இரத்த ஓட்டத்தில் நுழையும் போது, அவை சேதமடைந்த தமனிகளில் குவிக்கத் தொடங்குகின்றன. இதனால், ரத்த ஓட்டத்தில் கோளாறு ஏற்படுகிறது. இரத்த ஓட்டம் சீராக இருக்க, ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். எனவே, நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள். சிவப்பு இறைச்சி, கோழி, சீஸ் மற்றும் பிற விலங்கு சார்ந்த உணவுகளில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்புகளைத் தவிர்க்கவும். மேலும், அதிக உப்பு உட்கொள்வதை தவிர்க்கவும்.

சூடான குளியல் எடுப்பது ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதற்கு ஒரு எளிய வழியாகும். ஆனால் இது தற்காலிக நடவடிக்கை தான். சூடான நீர் தமனிகள் மற்றும் நரம்புகளை சிறிது விரிவுபடுத்துகிறது, இதனால் உடலுக்கு ரத்த ஓட்டம் நல்ல முறையில் கிடைக்கிறது. மேலும், சூடான நீர் அல்லது தேநீர் உங்கள் நரம்புகளை சிறப்பாக செயல்பட தூண்டுகிறது.

click me!