கருப்பு அரிசி மிக எளிதாக செரிமானம் அடையும். மேலும், பல நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கவும் செய்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளதால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
நம்முடைய தினசரி உணவில், அதிக இடத்தைப் பிடித்திருப்பது அரிசி தான். அரிசி உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நமக்கு பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். அதிலும் குறிப்பாக, கருப்பு அரிசியை நாம் அடிக்கடி சாப்பிட்டால் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும். நம் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, ஆரோக்கியம் நிறைந்து உணவுகளை மட்டும் உட்கொள்வது தான் சிறந்த உணவு முறையாகும். பல காலங்களுக்கு முன்னர் இருந்த சரிவிகித உணவு முறையை நாம் இனி பயன்படுத்த வேண்டியதும் மிக மிக அவசியமாகும். ஒருவர் சரிவிகித உணவை உட்கொள்ளும் போது, அவருக்கு பல ஊட்டச்சத்துக்கள் எளிதாக கிடைக்கும்.
கருப்பு அரிசி மிக எளிதாக செரிமானம் அடையும். மேலும், பல நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்கவும் செய்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளதால், நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
கருப்பு அரிசியின் நன்மைகள்
கண்கள் பாதுகாப்பு
சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, கருப்பு அரிசியில் ஜீயாக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற எதிர்ப்பு ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களால், கண்களுடைய வெளிச்சம் அதிகரித்து, தீங்கு விளைவிக்க கூடிய கூறுகளில் இருந்து பாதுகாப்பை அளிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்
கருப்பு அரிசியில் நார்ச்சத்து, புரதச்சத்து மற்றும் இரும்புச் சத்துக்கள் அதிகமாக நிரம்பியுள்ளது. இதனை அடிக்கடி சாப்பிடுவதால், உடல் வலிமை பெறுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் வலுவடைகிறது. இந்த அரிசியை சாப்பிடுவதால் செரிமான மண்டலமும் மிகச் சிறப்பாக வேலை செய்கிறது.
Rice Foods: அரிசி உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா?
மாரடைப்பு ஆபத்து குறையும்
கருப்பு அரிசி சாப்பிடுவதால், மாரடைப்பு அபாயமும் குறைகிறது. இதில் ஃபிளாவனாய்டுகள் எனும் ஓர் உறுப்பு உள்ளது. இது இதய நோய்களை குணப்படுத்த உதவி புரிகிறது. இந்த உறுப்பானது உடலில் இருக்கும் அந்தோசயனின் கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை மேம்படுத்தவும் உதவுகிறது.
புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பு
கருப்பு அரிசியை அடிக்கடி உண்பதால் புற்றுநோயிலிருந்து அதிக அளவிலான பாதுகாப்பு கிடைக்கும். இந்த கருப்பு அரிசியில் அந்தோசயனின் இருப்பதன் காரணமாக, அவற்றின் நிறம் கருப்பு-ஊதா நிறமாக மாறும். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு போன்ற புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் கருப்பு அரிசியில் காணப்படுகிறது.