சிவப்பு முள்ளங்கியை விட வெள்ளை முள்ளைங்கி தான் பெஸ்ட்…

 
Published : Mar 20, 2017, 02:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:43 AM IST
சிவப்பு முள்ளங்கியை விட வெள்ளை முள்ளைங்கி தான் பெஸ்ட்…

சுருக்கம்

Best mullainki is white rather than red radish

கிழங்கு வகைகளில் ஒன்றான முள்ளங்கி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களில் கிடைக்கிறது. அவற்றில் சிவப்பை விட வெள்ளை முள்ளங்கியே சிறந்தது.

முள்ளங்கி சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை ஏற்படும் என்று அதனை அடிக்கடி சமைத்து சாப்பிட மாட்டார்கள். ஆனால் முள்ளங்கியில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், உடலின் பல பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பைட்டோ - கெமிக்கல்கள் மற்றும் ஆந்தோசையனின்கள் உள்ளது. அது ப்ரீ-ராடிக்கல்கள் டி.என்.ஏ-வை பாதிப்பை தடுத்து புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

முள்ளங்கியில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அது உடலில் சோடியம் மற்றும் பொட்டாசியத்தை சமநிலைப்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கிறது.

முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமாகவும் மற்றும் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் சுரப்பதால், இது உடலில் இரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.

முள்ளங்கியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், அது நெஞ்சில் தேங்கியுள்ள சளியை முறித்து, உடனடி நிவாரணத்தைத் தருவதுடன், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.

நார்ச்சத்து நிறைந்த முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அது செரிமான அமிலத்தை சுரந்து, நாம் சாப்பிடும் உணவுகளை எளிதில் செரிமானம் அடையச் செய்து, மலசிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

முள்ளங்கியில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. எனவே இதை அடிக்கடி தங்களின் உணவில் அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையை விரைவில் குறையும்.

முள்ளங்கி சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பது மட்டுமின்றி, அதனை கரைக்கவும் உதவுகிறது. தினமும் 50மிலி முள்ளங்கி சாற்றுடன் நீர் கலந்து குடித்து வந்தால், கற்கள் கரைந்து, சிறுநீரகத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

 

PREV
click me!

Recommended Stories

Lip Balm : லிப் பாம் போடுறவங்க கண்டிப்பா 'இந்த' விஷயத்தை கவனிக்கனும்! அடுத்த முறை 'அந்த' தப்பை பண்ணாதீங்க
Weight Loss Breakfast Ideas : கடினமான உடற்பயிற்சி இல்லாமலே 'எடையை' குறைக்கும் காலை உணவுகள்!