
முள்ளங்கி:
முள்ளங்கியானது கசப்பு தன்மை வாய்ந்தது. இதனை சமைக்கும்போது ஒருவிதமான வாடை உண்டாகும். எனவே இதனை யாரும் விரும்புவதில்லை. இருந்தாலும் இதன் மருத்துவ நலன்களை உணர்ந்து இதனை பயன்படுத்துவோர் பலர்.
முள்ளங்கியின் வகைகள்:
1.. சிவப்பு முள்ளங்கி
2.. வெள்ளை முள்ளங்கி
மருத்துவ நலன்கள்:
1.. முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்குவதோடு குரலை இனிமையாக மாற்றுகிறது.
2.. முள்ளங்கி பசியை தூண்டுகிறது. மூத்திரக்காயில் உண்டாகும் கற்களை இவை கரைய செய்கின்றன.
3.. சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
4.. வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது.
5.. முள்ளங்கி சூப்பு நரம்பு சுருள்களை நீக்கும்.
6.. அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியானது உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும், தாது உப்புகளும் பெற்றுள்ளன.