சிவப்பரிசி, கேழ்வரகு சேர்த்து இப்படி சாப்பிட்டு பாருங்க...

Asianet News Tamil  
Published : Sep 26, 2017, 01:14 PM ISTUpdated : Sep 19, 2018, 01:13 AM IST
சிவப்பரிசி, கேழ்வரகு சேர்த்து இப்படி சாப்பிட்டு  பாருங்க...

சுருக்கம்

Benefits of eating red pepper and rice ..

சிவப்பு அரிசி, கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.

சிவப்பு அரிசி, கேழ்வரகை வைத்து இடியாப்பம் செய்து அதிக நன்மைகளை பெறலாம்.

சிவப்பு அரிசி – கேழ்வரகு இடியாப்பம்

தேவையான பொருட்கள்:

சிவப்பு அரிசி மாவு – கால் கிலோ

கேழ்வரகு மாவு – கால் கிலோ

உப்பு – சிறிதளவு

செய்முறை:

* ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* ஒரு பாத்திரத்தில் சிவப்பு அரிசி மாவு, கேழ்வரகு மாவு இரண்டையும் சேர்த்து கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாக ஊற்றி, இலகுவான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

* இந்த மாவை இடியாப்ப அச்சில் போட்டு, இடியாப்பமாகப் பிழியவும்.

* குக்கரிலோ இட்லி பாத்திரத்திலோ பிழிந்த இடியாப்பத்தை வைத்து 10 முதல் 15 நிமிடங்கள் வேகவிடவும்.

* சூடான இடியாப்பத்துடன் தேங்காய் பால், பால் சேர்த்துச் சாப்பிடலாம்.

நன்மைகள்

இதய நோய்கள் வராமல் காக்கும்

ஆஸ்துமாவின் தீவிரத்தைக் குறைக்கும்

மூட்டுவலி வீக்கத்தைக் குறைக்கும்.

உடலுக்கு சக்தியையும், தெம்பையும் கொடுக்கும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake