
நீங்கள் 40 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் நாள் முழுவதும் மிககுறைந்த கலோரி உணவுகள் எடுத்துகொள்வது அவசியம்.
கலோரிகள் குறைந்த உணவும் – பகல் நேரத்தில் மிக உற்சாத்துடன் வைத்து கொள்ளும் உணவே சிறந்தது.
இந்த பத்து உணவுகள் கலோரிகள் குறைந்த உணவுகள்.
1.. செலரிக் கீரை
செலரியில் 88 சதவிகிதம் நீர்ச்சத்து உள்ளது, புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, மாவுப்பொருள், தாது உப்புக்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை காணப்படுகின்றன. இவற்றுடன் வைட்டமின் – ‘ஏ’, வைட்டமின் – ‘பி’ வைட்டமின் – ‘சி’ போன்றவையும் இருப்பதால் இது ஓர் அடிப்படை உணவும் ஆகிறது. செலரியில் மக்னீசியமும், இரும்புச் சத்தும் அதிக அளவில் காணப்படுகின்றன.
2. ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் - வைட்டமின் சி. இது மனித உடலில் Collagen என்ற வளர்ச்சி உண்டாக்கக்கூடிய சத்து கிடைக்கச் செய்கிறது. இந்த Collagen வளரக்கூடிய எலும்புகள் தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
3. கிளை கோசுகள்
கிளைக் கோசுகளில் வைட்டமின் C மற்றும் வைட்டமின் K மட்டும் 38 கலோரிகள் கொண்டிருக்கின்றது.
4. முட்டைக்கோசு
காலிபிளவரில் விட்டமின் கே, மற்றும் ஒமேகா 3 சத்துக்கள் உள்ளன. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். இதில் நார்ச்சத்து காணப்படுவதால் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது.
5. வெள்ளரி
வெள்ளரியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிரஷர் சமநிலைப்படும். நெஞ்சக எரிச்சல், வயிற்று எரிச்சல், அல்சர், வாயுத்தொல்லைகளும் குணமடை யும்.