"சிவப்பு கொய்யா" சர்க்கரை நோயாளிகளுக்கு கடவுள் தந்த வரபிரசாதம்! ஏன் தெரியுமா..?

By Kalai SelviFirst Published Dec 28, 2023, 1:25 PM IST
Highlights

தர்பூசணி, பலாப்பழம் போன்றவற்றை மக்கள் விரும்புவது போல், கொய்யா பழத்தையும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் சிவப்பு கொய்யா பழத்தை சாப்பிடுவதன் மூலம் பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் பெறலாம். அவை..

கொய்யாவை யாருக்குத்தான் பிடிக்காது? அதன் சுவை மற்றும் நிறம் ரொம்பவே நன்றாக இருக்கும். நல்ல ஊட்டச்சத்துடன் வேறு. முக்கியமாக இதில் கால்சியம், புரதம், நார்ச்சத்து மற்றும் பல சத்துக்கள் உள்ளன. இதனால் பல நோய்களுக்கு அருமருந்தாக செயல்படுகிறது. அதுமட்டுமின்றி, இது சர்க்கரை நோய்க்கு உகந்தது என்ற பெயரையும் பெற்றுள்ளது. கொய்யா பழத்தில் சிவப்பு நிற கொய்யா மிகவும் பிரபலமானது. இதன் ஆரோக்கிய நன்மைகள் அளப்பரியதாக கூறப்படுகிறது. இந்த கட்டுரையில் சிவப்பு கொய்யா பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொள்வோம்.

Latest Videos

கொலஸ்ட்ராலை குறைக்கிறது: ஒவ்வொருவரின் இதயத்திற்கும் எதிரி கெட்ட கொலஸ்ட்ரால் தான். சிவப்பு நிற கொய்யாவில் கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது முக்கியமாக நமது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைப்பதன் மூலம் தொடர்ந்து செயல்படுகிறது.

இதையும் படிங்க:   கொய்யா இலைகள் உடல் எடையை குறைக்குமா? அட! என்னங்க இதுல இவ்ளோ நன்மைகள் இருக்கு!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: சிவப்பு கொய்யா பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சரும ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. இது முக்கியமாக காயம் குணப்படுத்துவதில் பங்கு வகிக்கிறது. 

இதையும் படிங்க:  Health Alert: நீரிழிவு நோயாளிகள் கொய்யாப்பழம் சாப்பிடலாமா..? யாரெல்லாம் தொடவே கூடாது தெரியுமா..?

தோல் சேதத்திற்கு எதிராக பாதுகாக்கிறது: இந்த பழத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் என்ற இரண்டு ஆக்ஸிஜனேற்ற கூறுகள் உள்ளன, அவை நம் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல் கூறுகளை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டுள்ளன. எனவே இவை நமது சருமத்திற்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பை வழங்குவதோடு, வயதான செயல்முறையிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.

எடை கட்டுப்பாட்டிற்கு உதவுகிறது: சிவப்பு கொய்யா பழத்தில் அதிக நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளது. ஊட்டச்சத்துக்களும் அதிகம். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், மதியம் சிவப்பு கொய்யா சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உடல் எடையை குறைப்பது மட்டுமின்றி உடல் பருமனையும் கட்டுப்படுத்துகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது: சிவப்பு கொய்யாவில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது மற்றும் திசு சேதத்தை தவிர்க்கிறது. ஒரு ஆய்வின் படி, சிவப்பு கொய்யா உடல் எடையை கட்டுப்படுத்துவதோடு இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். 

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நல்லது: இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், குறைந்த இனிப்புக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயராமல் தடுக்கிறது. ஆதலால், சர்க்கரை நோய்க்கு உகந்த பழம் இது என்று பெயர் பெற்றது. 

வெள்ளை அல்லது சிவப்பு கொய்யாவில் எது சிறந்தது?
பொதுவாக கொய்யாவில் வெள்ளை மற்றும் சிவப்பு என இரண்டு கொய்யா உள்ளன. ஆனால் ஊட்டச் சத்துக்களைப் பொறுத்தமட்டில், வெள்ளை கொய்யா பழத்தை விட சிவப்பு கொய்யா மிகவும் சிறந்தது. வைட்டமின் சி அளவு தவிர, மேலும் பல வகையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் காணப்படுகின்றன. எனவே நமது உடலுக்கு அதிக வைட்டமின் சி மற்றும் பல சத்துக்கள் கிடைக்க வேண்டும். எனவே நமது விருப்பம் சிவப்பு கொய்யாவாக இருக்க வேண்டும். உங்கள் சீரான உணவில் சிவப்பு கொய்யாவை சேர்த்துக்கொள்ளுங்கள். ஆனால் ஒரு எல்லை இருக்கட்டும்.

click me!