
Boost Liver & Kidney Health: Top 6 Fruits for Daily Detoxification : சிறுநீரகம் மற்றும் கல்லீரல் என்பது நம் உடலில் இருக்கும் முக்கியமான இரண்டு பாகங்கள் ஆகும். எனவே இந்த இரண்டு உறுப்புகளையும் ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் என்னவென்றால் சுத்தப்படுத்துதல். கல்லீரல் நம் உடலில் சேரும் பல வகையான நச்சுக்களை அகற்றும். அதேசமயம் சிறுநீரகம் அதை வடிகட்டி வெளியேற்ற உதவும்.
கல்லீரல் இதை மட்டுமல்ல நம் உடலில் பல வகையான செயல்பாடுகளையும் செய்கின்றது. நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், உறுப்புகளில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுவது ரொம்பவே முக்கியம். ஆகவே உங்களது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள அழுக்குகளை இயற்கையாகவே சுத்தப்படுத்த உதவும் சில பழங்கள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. நாவல் பழம் (jamun fruit):
நாவல் பழத்தில் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இந்த பழம் மற்றும் அவற்றின் விதை சிறுநீரகங்களில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவும். அதிக ரத்த சர்க்கரை அளவு மற்றும் வீக்கம் காரணமாக சிறுநீரக திசுக்கள் சேதமடையும். இவற்றிலிருந்து இந்தப் பழம் பாதுகாக்கும் என்று ஒரு ஆய்வு சொல்லுகின்றது. ஆக மொத்தம், நாவல் பழம் ஒட்டுமொத்த வளர்ச்சிதை மாற்ற மேம்படுத்தவும் மறைமுகமாக கல்லீரலிலிருந்து நச்சுக்களை குறைக்கவும் இது உதவுகிறது.
2. மாதுளை (pomegranate):
மாதுளை சிறுநீரகங்களில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற முக்கிய பங்கு வகிக்கிறது. ஆம், இதில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதால் வீக்கத்தை குறைக்கவும், சிறுநீரக கல் உருவாவதை தடுக்கவும் உதவுகின்றது. எனவே தினமும் ஒரு கிண்ணம் அளவு மாதுளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் திறம்பட செயல்படும்.
3. பப்பாளி (papaya):
பப்பாளிக்கும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் வலுவான தொடர்பு உள்ளது அதாவது பப்பாளியில் இருக்கும் பைப்பேன் உணவுப் புரதங்களின் முறிவை ஆதரிக்கும் ஒரு நொதி. இது கல்லீரலின் வளர்ச்சிதை மாற்ற சுமையை மிக எளிதாக்கும். இது தவிர பப்பாளியில் ஃபிளாவய்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், இவை இரண்டும் கொழுப்பு கல்லீரல் அபாயத்தை குறைக்க முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆயுர்வேதத்தின் படி, லேசான கல்லீரல் நச்சுத்தன்மைக்கு பச்சை பப்பாளி அல்லது அதன் சாற்றை குடிக்கலாம்.
4. குருதிநெல்லிகள் (cranberry):
இந்த பழத்தில் இருக்கும் புரேஆந்தோசயனிடின்கள் சிறுநீர் சுரப்பியில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்வது தடுக்கும் மற்றும் முழு சிறுநீர் அமைப்பையும் சிறப்பாக செயல்பட வைத்து சிறுநீரக ஆரோக்கியத்தை ஆதரிக்கும். எனவே சிறுநீர் பிரச்சினை உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் காலையில் சாப்பிடுவதன் மூலம் அல்லது இந்த பழத்தின் சாற்றை குடிப்பதன் மூலம் சிறுநீரக நோய் அபாயத்தை குறைக்கலாம்.
5. இனிப்பு எலுமிச்சை (mosambi):
இந்த பழம் வெறும் சளி நிவாரணி பழம் மட்டுமல்ல. நச்சுக்களை அகற்றி கல்லீரல் நொதிகளைத் தூண்டும் பண்புகள் இதில் உள்ளன. இந்த பழமானது மந்தமான செரிமானம் அல்லது அவ்வப்போது வீக்கம் ஏற்படுபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தின் சாற்றை சர்க்கரை அல்லது உப்பு சேர்க்காமல் குடித்தால் ரொம்பவே நல்லது. இதுதவிர, கல்லீரல் செல்களுக்கு புத்துணர்ச்சியூட்டும்.
6. தர்பூசணி (watermelon):
கோடைகாலத்தில் சாப்பிட வேண்டிய முக்கியமான பழம் தர்பூசணி. இந்த பழத்தில் இருக்கும் டையூரி சிறுநீரகங்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் சிறுநீர் ஓட்டத்தை அதிகரிக்கும். மேலும் இது நச்சுக்களை மெதுவாக வெளியேற்ற பெரிதும் உதவும். தர்பூசணியில் இருக்கும் சிட்ரூலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் உடலில் அம்மோனியாவை குறைக்கும். இதனால் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடுகள் இரண்டும் நன்றாக இருக்கும்.