உடல் எடையை குறைப்பதற்கான பல்வேறு உணவுப் பழக்கங்கள் உள்ளன. ஆனால் அவை ஆரோக்கியமானதாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறையும். இயற்கையான முறையில் கிடைக்கும் பானங்களை வைத்து உடல் எடையை குறைப்பதற்கான வழிகளை இங்கே பார்க்கலாம்.
சில சர்க்கரை-இனிப்பு பானங்கள், பாட்டில் சாறுகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ் என்று சொல்லக்கூடிய பதார்த்தங்கள் போன்றவை நூற்றுக்கணக்கான கலோரிகளை வழங்குகின்றன. இருப்பினும் எடையை குறைப்பதற்கும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதற்குமான பானங்களும் சந்தையில் கிடைக்க தான் செய்கின்றன. அந்த வகையில் உடலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுத்தாத வகையில், இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க உதவும் பானங்கள் குறித்து பார்க்கலாம்.
பிளாக் காபி
பிளாக் காபியில் குளோரோஜெனிக் அமிலம் என்கிற ஒரு பொருள் உள்ளது. இதன்மூலம் பிளாக் காபி குடிக்கும் பழக்கத்தை அதிகமாக்கிக் கொண்டால் பசியின்மை மற்றும் கலோரி உட்கொள்ளல் குறைந்துபோகும். இதனால் விரைவாகவே உங்களுடைய உடல் எடை குறைவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
ஆப்பிள் சிடார் வினிகர்
ஆப்பிள் சைடர் வினிகரின் முக்கிய அங்கமான அசிட்டிக் அமிலம், வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. ஒரு நாளைக்கு 1 முதல் 2 டேபிள் ஸ்பூன் வரை ஆப்பிள் சைடர் வினிகரை தாராளமாக அருந்தி வரலாம். இந்த மிதமான அளவு எடையை விரைவாகவே குறைக்க உதவும். ஆனால் உணவு விஷயத்திலும் கொஞ்சம் கட்டுப்பாடு வேண்டும்.
இளநீர்
குறைந்த கலோரி, குறைந்த கார்ப் பானத்தை விரும்புவோருக்கு இளநீர் நல்ல தேர்வாகும். இதில் வைட்டமின்கள் மற்றும் உடலுக்கு தேவையான தாதுக்கள் நிரம்பியுள்ளன. அதனால் உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க முடியும். குறிப்பாக இளநீரில் காணப்படும் பொட்டாசியம் இருதயத்துக்கு நன்மையை சேர்க்கும். இதன்மூலம் உடலில் இருக்கும் அதிகப்படியான உப்பு அகன்றுவிடுகிறது.
Condoms Facts : ஆணுறைகள்- அறிந்ததும்... அறியாததும்..!!
க்ரீன் டீ
கிரீன் டீயில் கேடசின்கள் மற்றும் காஃபின் உள்ளது, இது உடலில் கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்க உதவுகிறது. நீங்கள் தூங்கும்போது கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். அதற்கு க்ரீன் டீ-யை போதுமான இடைவெளியில் அருந்தி வருவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால் தயவுசெய்து யாரும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் க்ரீன் டீயை குடிக்க வேண்டாம். இதனால் பல்வேறு வயிறு சார்ந்த கோளாறுகள் ஏற்படும்.
பிளாக் டீ
பிளாக் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடல் எடையை குறைக்க உதவும். தொடர்ந்து பிளாக் டீ அருந்துவது கலோரிகள் மற்றும் கொழுப்பை எரிக்க உதவும். தினமும் மூன்று கப் பிளாக் டீ பருகுவது, உடல் எடையை வியத்தகு முறையில் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் எப்போது குடித்தாலும் சக்கரையை அளவாக சேர்த்துக்கொள்ளுங்கள்.