சாப்பிட்ட பிறகு செய்ய வேண்டிய 5 விஷயங்கள்

Published : Feb 04, 2025, 05:22 PM IST
சாப்பிட்ட பிறகு செய்ய வேண்டிய 5 விஷயங்கள்

சுருக்கம்

உணவு உட்கொண்ட பின் நடைபயிற்சி செய்யலாமா? நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன? என்பதை இப்பதிவில் காணலாம்.

உணவு உட்கொண்ட பின்னர் நடைப்பயிற்சி செய்வது என்பது உடலுக்கும் மிகவும் நல்லது. இது நம் உடல் ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் மேம்படுத்தும். சாப்பிட்ட பிறகு நடைபயிற்சி செய்வது நல்லது தான் ஆனால் அதை சரியாக செய்யவும் நடைபயிற்சியினால் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கடைபிடிக்க  வேண்டிய 5 வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். 

10-15 நிமிடங்கள் ஓய்வு

நம்மில் பலரும் சாப்பிட்ட உடன் எழுந்து செல்லாமல் அப்படியே அமர்ந்து இருப்போம். சாப்பிட்ட உடன் ஒரு சிறிய ஓய்வு உடலுக்கு மிகவும் நன்மையை தரும். சாப்பிட்ட உடன் 10-15 நிமிடங்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதை தான் நம் முன்னோர்கள் உண்ட மயக்கம் தொண்டனுக்கும் என்று சொல்வார்கள். இந்த சிறிய ஓய்வு என்பது நாம் உட்கொண்ட உணவுகள் வயிற்றில் செரிமானத்தை தொடங்க ஆரம்பிக்கும். இந்த ஓய்வானது நடக்கும்போது ஏற்படும் அசௌகரியம் மற்றும் தசைபிடிப்பு ஏற்படாமல் இருக்க உதவுகிறது. நடக்க தொடங்குவதற்கு முன் ஒரு கப் தண்ணீர் குடிப்பது இன்னும் சிறந்தது.

இசையுடன் நடைப்பயிற்சி

2011ஆம் ஆண்டு நடத்திய ஒரு ஆய்வில் உணவு சாப்பிட்ட பிறகு ஓய்வெடுக்கவும், பின்னர் 30-60 நிமிடங்களுக்கு நடப்பது நல்லது என தெரியவந்துள்ளது. வாயு பிரச்னை, அஜீரண கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளவர்கள் சாப்பிட்ட பின் நடப்பது மிகவும் நல்லது. இது செரிமானத்தை தூண்டி செரிமான பிரச்னையை சரிசெய்யும். சாப்பிட்ட உடன் வேகமாக நடைபயிற்சி செய்யக்கூடாது. இது எப்படியிருக்க வேண்டும் என்றால் ஒருவருடன் பேசி கொண்டு நடப்பது அல்லது இசையை கேட்டு ரசித்தப்படி நடப்பது போன்ற இருந்தால் போதும். மெதுவாக நடப்பது செரிமானத்தைத் தூண்டவும், இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

எளிய வகை கைப்பயிற்சிகள்

1. கைகளை நன்கு நீட்டி விரல்களை மெதுவாக திறந்து மூடவேண்டும்.(10 முறை செய்யவேண்டும்) 

2. மணிக்கட்டுகளை சுழற்றியும், கடிகார திசையிலும், எதிரெதிர் திசையிலும் சில வினாடிகள் சுழற்ற வேண்டும்.

3. தோள்பட்டை இயக்கத்திற்காக கைகளை முன்பக்கமாகவும், பின்னபக்கமாவும் சுழற்ற வேண்டும்.

4. கட்டை விரல் வைத்து ஒவ்வொரு விரலின் நுனிப்பகுதியையும் தொட வேண்டும். 

 இந்த கை அசைவுகள் நம்மில் உள்ள பதற்றத்தை நீக்கி மனஅமைதியை ஏற்படுத்த உதவுகிறது. 

ஆழ்ந்த சுவாசம் (Deep Breathing)

சுவாசம் செய்யும் போது காற்றை நன்றாக இழுத்து ஆழ்ந்த சுவாசம் செய்யவேண்டும். ஆழமான மூச்சை உள்ளிழுத்து, வாய் வழியாக வெளியேற்ற வேண்டும். இவ்வாறு செய்யும்போது ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரித்து, செரிமானத்திற்கு உதவுகிறது. ஒரு அமைதியான நடைப்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைத்து ஒட்டுமொத்த மனநிலையை மேம்படுத்தும். 2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வு , சுவாசித்துக் கொண்டே நடைபயிற்சி செய்வது இதய நோயாளிகளின் உடல் செயல்பாடுகளை அதிகரிப்பதாகக் கூறுகிறது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Winter Hair Care : குளிர்காலத்துல ஒரு முடி கொட்டாம அடர்த்தியாக வளரனுமா? அப்ப இந்த எண்ணெய்ல ஒன்னு தேய்ங்க!
Weight Loss : சியா விதை நீரா? சீரக தண்ணீரா? உடல் எடையை விரைவில் குறைக்க எது பெஸ்ட்?