குளிர்காலத்தில் சாப்பிட்ட வேண்டிய பழங்களின் பட்டியல் இதோ..!!

Published : Nov 27, 2022, 02:13 PM IST
குளிர்காலத்தில் சாப்பிட்ட வேண்டிய பழங்களின் பட்டியல் இதோ..!!

சுருக்கம்

பொதுவாக குளிர்காலத்தில் பழங்களை சாப்பிட வேண்டாம் என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் குளிர்காலத்துக்கு ஏற்றவாறு சில பழங்களை சாப்பிடுவதை உடலுக்கு மிகவும் நல்லது.  

ஒவ்வொரு காலநிலைக்கு ஏற்றவாறு பழங்கள் விற்பனைக்கு கிடைக்கும். அப்படிப்பட்ட பழங்களை சீசன்களுக்கு தகுந்தபடி சாப்பிடுவது உடல்நலனுக்கு அதிக பலன் தரும். எனவே இந்த குளிர்காலத்திற்கு ஏற்றவாறு எந்தெந்த பழங்களை தேர்வு செய்து சாப்பிடலாம் என்று தெரிந்துகொள்வோம். பழங்கள் சாப்பிடுவதில் பல்வேறு ஆரோக்கிய நலன்கள் உள்ளன. அது சருமத்திற்கும் உடல்நலனுக்கு பல்வேறு வகையில் நன்மைகள் சேர்க்கின்றன. ஒவ்வொரு சீசனிலும் கிடைக்கும் பழங்களைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதை, ஒவ்வொரு சீசனிலும் கடைப்பிடிக்க வேண்டும். எனவே இந்த குளிர்காலத்தில் எந்தெந்த பழங்கள் கிடைக்கும், அதை எப்படி சாப்பிடலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆப்பிள்

ஆப்பிள்களை குளிர்காலம் என்றில்லை, எந்த காலத்திலும் சாப்பிடலாம். அதேசமயத்தில் ஒருநாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவதே போதுமானதாகும். அளவுக்கு மீறி சாப்பிட்டுவிடாதீர்கள். ஆப்பிளில் உடலுக்கு வேண்டிய நார்ச்சத்து உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதை தொடர்ந்து சாப்பிடுவதால் செரிமானம் நன்றாக இருக்கும். மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயைக் குறைக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளன. மேலும் ஆப்பிள்களில் காணப்படும் வைட்டமின் சி நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

கொய்யா

குளிர்காலம் என்றால் வீட்டு முற்றத்திலும் வயல்வெளிகளிலும் கொய்யா காய்க்க ஆரம்பித்துவிடும். நம் நாட்டில் பல வகையான கொய்யா வகைகள் உள்ளன. இந்த சீசனில் கொய்யா சாப்பிடுவது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. இது செல்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், உடலில் ஏற்படும் எலும்பு பிரச்னைகளை குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது. அதேசமயத்தில் கொய்யாவுக்கு செரிமானத்தை மேம்படுத்தும் மற்றும் புற்றுநோயை எதிர்த்து போராடும் திறன் உள்ளது. சிவப்பு கொய்யா கிடைத்தால் உடனடியாக வாங்கிவிடுங்கள், விட்டுவிட வேண்டாம்.

ஆரஞ்சு

ஆரஞ்சு பழத்தில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன. குளிர்காலத்தை முன்னிட்டு பலவகையான ஆரஞ்சுப் பழங்கள் சந்தையை வந்தடையும். இந்த பழத்தில் வைட்டமின்கள், பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் தியாமின் ஆகியவை நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சிறுநீரக நோய்களை குறைக்கவும் உதவுகிறது. ஆரஞ்சு சாப்பிடுவது இரத்த சோகையை தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. தினமும் ஒரு ஆரஞ்சு சாப்பிடுவது நல்ல பலனை தரும்.

உங்களுக்கு பனீர் மிகவும் பிடிக்குமா..? அப்போ இந்த பதிவை நீங்க கட்டாயம் படிக்கணும்..!!

கிவி

கிவிப் பழத்தின் பயன்பாடு குறித்து தற்போது தான் பலருக்கும் தெரிந்து வருகிறது. இதில் உடலுக்கு தேவையான பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ரத்த சோகையை குறைப்பதற்கும், சரும பிரச்னைகளையும் களையவும் கிவிப் பழம் பெரிதும் உதவுகிறது. இந்தப் பழத்தில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகின்றன. அதேசமயத்தில் மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், துத்தநாகம் மற்றும் இரும்புச் சத்துகளும் கிவிப் பழத்தில் அடங்கியுள்ளன.

திராட்சை

தமிழ்நாட்டுக்கும் திராட்சைக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. நம் மாநிலத்தில் கிடைக்காத திராட்சை வகைகளே கிடையாது என்று சொல்லலாம். பல்வேறு வண்ண திராட்சைகள் தற்போது விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த பழத்தில் நிறைய ஆரோக்கியம் உள்ளது. இதிலிருந்து நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகின்றன. மேலும் உடலுக்கு வேண்டிய பல ஊட்டச்சத்துக்கள் திராட்சையில் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் இது உடலில் ஏற்படும் எலும்பு பிரச்னையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

PREV
click me!

Recommended Stories

Gut Health: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் 7 விஷயங்கள்!
Daily Multivitamin : வயதானவர்கள் தினமும் மல்டிவைட்டமின் எடுத்தால் என்ன ஆகும்? வெளியான அதிர்ச்சி தகவல்