திருமண உறவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இவை தான் முக்கிய காரணங்கள்.. என்னென்ன தெரியுமா?

By Asianet Tamil  |  First Published Jul 27, 2024, 7:17 PM IST

திருமண உறவில் தம்பதிகள் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..


தற்போதைய காலக்கட்ட சிறு சிறு பிரச்சனைகளுக்கு கூட தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிந்து விடுகின்றனர். இதனால் நீடித்த உறவுகள் அரிதான ஒன்றாக மாறிவிட்டது.. தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அர்ப்பணித்து, சவால்களை சமாளிக்கும் போது மட்டுமே அந்த உறவு நீடித்த ஆரோக்கியமான உறவாக மாறும். எனவே தம்பதிகள் சந்திக்கும் பொதுவான உறவுப் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

தொடர்பு இல்லாமை

Tap to resize

Latest Videos

நல்ல தகவல்தொடர்பு ஒரு காதல் உறவின் அடித்தளமாக செயல்படுகிறது. வெளிப்படையான தகவல்தொடர்பு இருந்தால் மட்டுமே நம்பிக்கை, நெருக்கம் மற்றும் புரிதல் ஆகியவை ஏற்படும்.. தம்பதிகள் தங்கள் மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்த போராடும் போது, ​​பிரச்சனைகள் தொடங்கும். ஒரு உறவில் வெளிப்படையான, நேர்மையான தகவல்தொடர்பு இல்லை எனில் அது தம்பதிகளிடையே விரிசலை ஏற்படுத்தும்.

நிதி

ஒரு உறவில் மோதலை ஏற்படுத்தும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று பணம். வெவ்வேறு நிதி ஆதாரங்கள் அல்லது அல்லது வெவ்வேறு செலவு பழக்கங்கள், நிதி சிக்கல்கள் ஆகியவை குறித்து உங்கள் துனையிடம் வெளிப்படையாக பேசவில்லை எனில் அது உறவில் சிக்கலை ஏற்படுத்தும்.

ஆண்களே உஷார்.. உங்களிடம் இந்த 5 பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்லனா விந்தணு எண்ணிக்கை குறைஞ்சிடும்!

நெருக்கம்

தம்பதிகளிடையே ஏற்படும் மற்றொரு பொதுவான பிரச்சனை நெருக்கம். தம்பதிகளுக்கு வெவ்வேறு தேவைகள் மற்றும் ஆசைகள் இருக்கலாம். எனினும் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பற்றிய நேர்மையான உரையாடல் ஒரு உறவை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான முக்கிய பகுதியாகும். பாலியல் உறவை பொறுத்த வரை உங்கள் துணையின் சம்மதம் மிக முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நம்பிக்கை மற்றும் பொறாமை

உறவில் பாதுகாப்பின்மை, பொறாமை அல்லது அவநம்பிக்கை போன்ற உணர்வு பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அத்தகைய உணர்வுகளை நீங்கள் உணர்ந்தால், அதுபற்றி உங்கள் துணையுடன் பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. அந்த பிரச்சினையின் காரணத்தை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு பேசுவது நல்லது.

பொருந்தாத வாழ்க்கை இலக்குகள்

பொருந்தாத வாழ்க்கை இலக்குகள் மற்றொரு பொதுவான உறவு பிரச்சனை. தம்பதிகளிடையே ஆசைகள், கனவுகள் மற்றும் முன்னுரிமைகளில் முரண்பாடுகள் ஏற்படலாம். இது உறவில் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஒருவருக்கொருவர் தனிப்பட்ட கனவுகள் மற்றும் லட்சியங்களை மதித்து முன்னேறுவதற்கான வழியைக் கண்டறிய ஒன்றாக தீர்வு கண்டறிவது முக்கியம்.

தீர்க்கப்படாத கடந்த கால பிரச்சினைகள்

தீர்க்கப்படாத கடந்தகாலச் சிக்கல்கள் மீண்டும் தோன்றி, திருமண உறவின் தற்போதைய சுமுக நிலையை பாதிக்கலாம்.  உங்கள் துணை தவறாக நினைப்பார் என்ற பயம் இல்லாமல் வெளிப்படையாக உங்கள் துணை உடன் பேசுங்கள். புரிதல் மற்றும் அனுதாபத்துடன் பரஸ்பர ஆதரவை வழங்குவது முக்கியம்.

இதை மட்டும் ஃபாலோ பண்ணா போதும்.. உங்களையும் துணையையும் யாராலயும் பிரிக்கவே முடியாது..

தரமான நேரம்

உங்கள் துணை உடன் தரமான நேரத்தை செலவிடவில்லை என்றாலும் உறவில் சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் உங்கள் துணை புறக்கணிக்கப்பட்டதாக அல்லது உணர்ச்சி ரீதியாக துண்டிக்கப்பட்டதாக உணரலாம். உணர்ச்சி ரீதியிலான தொடர்பு மற்றும் நெருக்கமான பிணைப்பை வளர்ப்பதற்கு ஒருவருக்கொருவர் தரமான நேரம் செலவிடுவது முக்கியம். 

துரோகம்

உங்கள் துணை உங்களை ஏமாற்றினால், நீங்கள் அவர்களை மன்னிக்க முடியுமா அல்லது உங்கள் வாழ்க்கையில் அவர்கள் இல்லாமல் செல்ல விரும்புகிறீர்களா என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும். ஒருவேளை உங்கள் துணையை மன்னித்து அவர்களுடன் சேர்ந்து வாழ நினைத்தால் என்ன நடந்தது என்பதைப் பற்றி நீங்கள் ஒருவருக்கொருவர் நேர்மையாக இருக்க வேண்டும், அடிப்படை சிக்கல்களைத் தீர்க்க ஒன்றாகச் செயல்பட வேண்டும்.

வேலைகளில் சண்டையிடுதல்

சில சமயங்களில், வீட்டு வேலைகளை செய்வதில் கூட தம்பதிகளிடையே பிரச்சனை ஏற்படலாம். உங்கள் துணை உடன் வெளிப்படையாக பேசி அதற்கேற்ப வேலைகளைப் பிரித்துக் கொள்வது நல்லது. வீட்டு வேலைகளால் ஏற்படும் பிரச்சனையை தடுக்க முடியும். 

click me!