திருமண உறவில் வெளிப்படையான தகவல்தொடர்புகளை வளர்ப்பதற்கும் வலுவான இணைப்பைப் பேணுவதற்கும் உதவும் சில டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான திருமண உறவு என்பது பரஸ்பர நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றால் கட்டமைக்கப்படுகிறது. மேலும் ஒரு ஆரோக்கியமான உறவில் ஒன்றாக வெளியே செல்வது, சிறப்பு நிகழ்வுகளை ஒன்றாகக் கொண்டாடுவது, விடுமுறையில் செல்வது மற்றும் தரமான நேரத்தை ஒன்றாகச் செலவிடுவது போன்ற பல விஷயங்களும் அடங்கும். இவை அனைத்திற்கும் மத்தியில், அடிக்கடி கவனிக்கப்படாத ஒரு விஷயம், தகவல்தொடர்பு நடைமுறை. ஆம். நீடித்த இணைப்பை உருவாக்க உங்கள் துணை உடன் தவறாமல் தொடர்புகொள்வது அவசியம். நீங்கள் பேசாமல் இருக்க இருக்க உறவில் விரிசல் அதிகரித்துக் கொண்டே செல்லும். வெளிப்படையான தகவல்தொடர்புகளை வளர்ப்பதற்கும் வலுவான இணைப்பைப் பேணுவதற்கும் உதவும் சில டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாராட்டு
தம்பதிகள் ஒருவருக்கொருவர் பாராட்டு தெரிவிக்க வேண்டும். அது சிறிய விஷயமாக இருந்தாலும் சரி. அல்லது பெரிய சாதனையாக இருந்தாலும் உங்கள் துணையின் செயல்களை அங்கீகரிப்பதும் அதை பாராட்டுவதும் மிகவும் முக்கியம். இதனால் நீங்கள் அவர்களின் சிறு செயலை கூட மதிப்பதாக அவர்கள் உணர்வார்கள்.
காதலிச்சி திருமண பண்ணியும் காதல் இல்லையா..? அப்ப முதல்ல 'இத' ஃபாலோ பண்ணுங்க..!
வெளிப்படையான விவாதம்
உங்கள் துணை உடன் ஆரோக்கியமான விவாதம் மேற்கொள்வது நல்லது. ஒரு வாரத்தில் நடந்த நேர்மறையான அனுபவங்கள், சாதனைகள் அல்லது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்த அல்லது உங்களை பெருமைப்படுத்திய தருணங்கள் ஆகியவை குறித்து உங்கள் துணையுடன் விவாதிக்கலாம். தம்பதிகள் தனித்தனியாகவோ அல்லது ஜோடியாகவோ வாரம் முழுவதும் சந்திக்கும் சிரமங்கள் அல்லது சவால்களைப் பற்றி விவாதிக்க வேண்டும். வேலை தொடர்பான மன அழுத்தம், குடும்பம் அல்லது நண்பர்களுடன் மோதல்கள் அல்லது தங்களை ஆழமாகப் பாதித்த வேறு ஏதேனும் பிரச்சினை குறித்தும் உங்கள் துணையிடம் மனம் விட்டு பேசலாம். இந்த வாரம் எப்படி போனது என்பது பற்றியும் அடுத்த வாரம் ஏதேனும் முன்னேற்றம் அல்லது கவனம் தேவைப்படுகிறதா என்றும் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்ளலாம்.
உணர்ச்சி நல்வாழ்வு
உறவில் மிக முக்கியமான பாகங்களில் ஒன்று உணர்ச்சி நல்வாழ்வைக் கவனித்துக்கொள்வது. உங்கள் துணை எப்படி உணர்கிறார் அவருக்கு உணர்வு அல்லது மன ரீதியாக ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்று கேளுங்கள். அவர் உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால் அவருக்கு உங்கள் முழு ஆதரவை வழங்குங்கள்.
கசந்து போன உங்க திருமண வாழ்க்கையில் மறுபடியும் காதல் பொங்கணுமா? இதை மட்டும் செய்யுங்க போதும்
சிக்கல்களை தீர்ப்பது முக்கியம்
அனைத்து பேச்சுக்கள் மற்றும் பகிர்வுகளுக்குப் பிறகு, உங்கள் உறவில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதை தீர்ப்பது முக்கியம். உங்கள் துணை உடன் தீர்க்கப்படாத சண்டை ஏதேனும் இருந்தால், அதை பேசி தீர்க்க முயற்சிக்க வேண்டும். வெளிப்படையான, நேர்மையான தகவல்தொடர்பு, உங்கள் துணை பேசும் போது கவனமாக கேட்பதும் இதில் முக்கியம். பிரச்சனைக்கான தீர்வுகளை கண்டறிய ஒன்றாக பேசி ஒருமித்த கருத்துக்கு வரலாம்.
எதிர்காலத்தை பற்றிய பேச்சு
தம்பதிகள் தங்கள் எதிர்கால திட்டங்கள் பற்றி பேச வேண்டும். இது ஒரு சாதாரண அட்டவணை அல்லது பிற பொறுப்புகளாக இருக்கலாம், அவை பொறுப்புகளை நிர்வகிப்பதில் ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்க வேண்டும்.