ஒரு நல்ல வெற்றிகரமான உறவை பேணிப்பாதுகாக்க, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு ரகசியம் உள்ளது, அது தான் உங்கள் துணையுடன் திறம்பட தொடர்புகொள்ளும் திறன். அடிக்கடி உங்கள் துணையோடு நீங்கள் ஒன்றாக அமர்ந்து பேசினாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்துவிடுமாம்.
காது கொடுத்து கேளுங்கள்.
உங்கள் துணையோ அல்லது உங்கள் காதலியோ, காதலனோ, உங்களிடம் பேச வரும்பொழுது, நீங்கள் அவசர வேளையில் இருந்தாலும், ஒரு நிமிடம் அவர்களோடு கைகோர்த்து அமர்ந்து அவர்கள் சொல்ல வருவது என்ன என்பதை கேட்டு அறிந்து கொள்ளுங்கள். இதுதான் ஒரு நல்ல உறவை பேணிக்காக்க முதல் படி என்கின்றனர் நிபுணர்கள்.
தம்பதிகளே.. உங்கள் உறவை வலுவாக்க ஃபாலோ பண்ண வேண்டிய முக்கியமான விஷயங்கள்..
ஒளிவு மறைவின்றி பேசுங்கள்
நீங்கள் தவறே செய்திருந்தாலும், அதை ஒப்புக்கொண்டு உங்கள் துணையிடம் ஒளிவு மறைவின்றி பேசி பழகுங்கள். அது ஒரு பிரச்சனை, அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் பேசிய மாத்திரத்திலேயே முற்றுப்பெறும் ஒரு சின்ன விஷயமாக மாறிவிடும். மாறாக ஒளிவு மறைவோடு பேசுவதால், வெகு சிறிய பிரச்சனையும், பூதாகரமாக வெடிக்க பல வாய்ப்புகள் உள்ளது என்பதை மறக்கவேண்டாம்.
கோபப்பட்டால் அமைதியாக பேசுங்கள்.
உங்கள் துணை ஆணாக இருப்பிலும் சரி, பெண்ணாக இருப்பினும் சரி, விட்டுக் கொடுத்து பேசுவது மிகவும் நல்லது. நமக்காக வாழும் ஒரு உயிரிடம் நமது அகங்காரத்தை காட்டாமல் சற்று இறங்கி போவதில் துளியும் தவறில்லை. வியாபார ரீதியாகவும், வேலைக்காகவும் வெளியில் எத்தனையோ பேரிடம் பணிந்து, கனிவாக பேசும் நம்மால், நமக்காக வாழும் ஒரு நபரிடம் நிச்சயம் அதே போல பேச முடியும்.
நல்ல உடலுறவு.. ஆண்களுக்கு இதனால் கிடைக்கும் சிறந்த நன்மைகள் என்னென்ன தெரியுமா? முழு விவரம்!