Relationship tips: காதலிக்கும்போது செய்யக் கூடாத சில தவறுகள் குறித்து இங்கு காணலாம்.
நாம் ஒருவரை காதலித்து அவரோடு உறவில் இருந்தாலும், சில நேரங்களில் எந்த பிணைப்பும் இல்லாதது போல இருக்கும். எப்போதும் ஏதேனும் கருத்து மோதல்களும், சண்டைகளும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். திரைப்படங்களை பார்த்து நமக்கே நமக்கான காதல் வரும், அது நம் அத்தனை தவறுகளையும் மன்னிக்கும் என சிலர் நம்பிக் கொண்டிருப்போம். ஆனால் உறவுகள் எப்போதும் 100% நமக்கு ஏற்றது போலவே இருப்பதில்லை. சில சகிப்புத்தன்மை தான் உறவை பலப்படுத்தும். அதற்காக எல்லாவற்றையும் பொறுத்து கொள்ள வேண்டும் என்பதில்லை. எல்லாவற்றிற்கும் கோவப்பட வேண்டியதில்லை. காதலில் செய்யக் கூடாத சில தவறுகளை இங்கு காணலாம்.
சுயரூபம்!
உங்களை காதலிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இயல்பை மீறி எதையும் செய்யாதீர்கள். அதாவது காதலிக்கும் சமயங்களில், என்ன வேலை இருந்தாலும் அவர் பின்னாடியே அலைவது. காதல் செட் ஆன பிறகு கண்டு கொள்ளாமல் வேலை மீது கவனம் செலுத்துவது. காதல் ஓ.கே ஆகிவிட்டால் ஒரு அலட்சியம் ஏற்பட்டுவிடுகிறது. அதை செய்ய கூடாது. காதலிக்க முயற்சி செய்யும் சமயங்களில் அவருடைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாதது போல் காட்டிக் கொண்டு, காதலுக்கு சம்மதம் தெரிவித்த பிறகு அவருடைய தனியுரிமையில் (Privacy) தலையிடுவது முக்கியமான தவறு. இப்படி ஒருவர் எப்போதும் உங்களுடைய தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு சண்டை ஏற்படுகிறது எனில் அது டாக்சிக்கான காதல். கவனம் தேவை.
மீட்பர் வந்துவிட்டார்!
எந்த உறவாக இருந்தாலும் இருபக்கமும் புரிதல் இருக்க வேண்டும். ஒருவர் தவறு செய்யும் போது அதை எடுத்து சொல்லி திருத்த சொல்ல வேண்டுமே தவிர, பொறுத்துப் போகக்கூடாது. மீண்டும் மீண்டும் ஒரே தவறை செய்யும் நபர், காலப்போக்கில் அவரே மாறுவார். உங்கள் காதல் அவரை மாற்றும் என்று நம்பிக்கையில் அவரோடு இருப்பது சிக்கலில் கொண்டு போய் தான் விடும். அவரது தவறான போக்கை சில முறை சுட்டிக்காட்டலாம். அவர் திருந்தவில்லையென்றால் விலகிவிடுங்கள். காலம் முழுக்க சகித்து கொண்டே இருந்தால் எப்போது வாழ்வது? யோசித்து செயல்படுங்கள். நீங்கள் மீட்பர் அல்ல சகோ!
இதையும் படிங்க; பெண்களை இப்படி கிஸ் அடிச்சா சொக்கி போவாங்க.. இதை ட்ரை பண்ணி பாருங்க!
பொறுமையே பெருமை!
அவசரமாக காமம் கூட செய்ய முடியும் ஆனால் காதலிக்க முடியாது. பொறுமையாக உங்களுக்கான நபரை கண்டு தேர்வு செய்யுங்கள். ஒரே ஒரு செடி ஒரு பூ என்ற நோக்கில் 'ஒரு வாய்ப்புதான் கிடைக்கும்' என அவசரமாக காதலை சொல்லி மாட்டிக் கொள்ளாதீர்கள். அவர் உங்களுக்கான நபர் தானா என்பதை பழகி தெரிந்து கொள்ளுங்கள். பொறுமையாக காதலை நகர்த்துங்கள். தேவைக்காக கிடைத்த சந்தர்ப்பத்தில் காதல் செய்யும்போது அது தேவையில்லாத பிரச்சினைகளில் கொண்டு போய்விடும். கவனம்!
உங்களை போல அவர்களை மாற்றாதீர்கள்!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இயல்பு இருக்கும். உங்களுக்கு ஏற்றபடி மட்டுமே உங்களுடைய இணை நடந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை கைவிடுங்கள். ஒருவருக்கொருவர் லட்சியத்திலும் விருப்பங்களிலும் உற்ற துணையாக இருங்கள். அவர்களுடைய இயல்பை ரசித்து காதலை வெளிப்படுத்த தயங்காதீர்கள்.
உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, எல்லா பிரச்சனைகளிலும் நியாயமாக நடந்து கொள்பவரை நீங்கள் காதலித்தால் அது உண்மையான காதல். அதே மாதிரியான புரிதலை நீங்களும் அவருக்கு அளிக்க வேண்டும்.