sexual health: உடலுறவில் ஈடுபடாமல் இருந்தால் புற்றுநோய் பாதிப்பு- ஆய்வில் அதிர்ச்சி..!!

By Pani MonishaFirst Published Jan 11, 2023, 1:47 PM IST
Highlights

உடலுறவு கொள்ளாமல் இருப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. நீண்ட காலமாக உடல் ரீதியான உறவை ஏற்படுத்தவில்லை என்றால், உடல்நலனில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
 

செக்ஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அல்லது அதைப் பற்றி பேசுவது நம் சமூகத்தில் நல்லதாகக் கருதப்படுவதில்லை, ஆனால் இது நம் சமூகத்தின் மிக முக்கியமான தேவைகளில் ஒன்றாகும், ஏனெனில் இதன் மூலம் மட்டுமே சமூகத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். உடலுறவு என்பது சமூக ரீதியாக மட்டுமல்ல, உடலளவிலும் மிகவும் முக்கியமானது. நீங்கள் நீண்டகாலமாக உடலுறவில் ஈடுபடாமல் இருந்தால், அதனால் உடலில் பல கடுமையான விளைவுகள் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நீண்ட நாட்களாக உடலுறவு கொள்ளாமல் இருப்பதன் மூலம் உடலில் என்ன பாதிப்பு ஏற்படும் என்று தேசிய உயிரி தொழில்நுட்ப தகவல் மையம் நடத்திய ஆய்வில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆய்வின் பின்னணி

குறிப்பிட்ட இவ்வாய்வுக்கு வேண்டி என்.சி.பி.ஐ 17744 பேரை ஈடுபடுத்தியது. அதில் 15.2% ஆண்களும் 26.7% பெண்களும் 1 வருடமாக உடலுறவு கொள்ளாமல் இருந்துள்ளனர். மேலும் 8.7% ஆண்கள் மற்றும் 17.5% பெண்கள் 5 வருடங்களாக உடலுறவில் ஈடுபடவில்லை. அதன் காரணமாக அவர்களுடைய உடலில் பல பாதிப்புகள் காணப்பட்டன. நீண்ட நாட்களாக உடலுறவு கொள்ளாததால் உடல் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறது என்பதை குறித்து விரிவாக பார்க்கலாம்.

மன அழுத்தம்

ஆரோக்கியமான வகையில் உடலுறவில் ஈடுபடுவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை எதிர்கொள்கின்றனர். இதனால் அவர்களுடைய உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எப்போதும் உற்சாகத்துடனும் மற்றும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். ஆனால் நீண்ட நாட்களாக உடலுறவில் ஈடுபடாதவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல் பிரச்னைகள் அதிகரிக்கின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க; Pongal 2023: பொங்கலில் சூரிய பகவானை ஏன் வழிபடுகிறார்கள்? என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இரத்த அழுத்தம்

நீண்ட நாட்களாக உடலுறவில் ஈடுபடாததன் விளைவாக பலருக்கும் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும் போது, ​​அது இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. அதனால் ரத்த அழுத்தத்தில் ஒழுங்கற்ற நிலை காரணப்படுகிறது. அதன்காரணமாக பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றன என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

கவலைகள்

நீண்ட நாட்களாக உடலுறவு கொள்ளாதவர்களுக்கு மன அழுத்தப் பிரச்னையுடன் கவலையும் சேர்ந்துவிடும். எதற்கெடுத்தாலும் கவலை, எதை நினைத்தாலும் கவலை என்கிற நிலை தோன்றும். இதனால் புத்துணர்ச்சியில்லாமல் சுறுசுறுப்பு இல்லாமல் காணப்படுவார்கள். இது அவர்களுடைய தினசரி வாழ்க்கையை பாதித்து, இறுதியில் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும். 

நினைவாற்றல் இழப்பு

உடலுறவில் ஈடுபடுபவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உண்மையில், உடலுறவு உங்கள் மூளை நியூரான்களை வளர்க்கவும் சிறப்பாக செயல்படவும் உதவும். மாறாக, முறையாக உடலுறவு கொள்ளாதவர்களுக்கு நினைவாற்றல் குறைவாக இருக்கும்.

கனையப் புற்றுநோய்

ஆண்களைப் பொறுத்தவரை, அவர்களுடைய பாலியல் வாழ்க்கை விதைப்பை புற்றுநோயின் சாத்தியத்துடன் இணைக்கப்படுகிறது. இதுதொடர்பாக 30,000 ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின்படி, ஒரு மாதத்திற்கு சராசரியாக 21 முறைக்கு மேல் உடலுறவு கொண்டவர்களிடம் புரோஸ்டேட் புற்றுநோயை உருவாவதற்கான வாய்ப்பு குறைந்து காணப்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க; இடியாப்ப சிக்கலாகும் திருமண வாழ்க்கை! எல்லா பொருத்தமும் பாத்து கல்யாணம் பண்ணாலும் விவாகரத்து! யார் காரணம்?

click me!